தமிழகம்

கணவனை வேலைக்கு அனுப்பி விட்டு புதுமணப்பெண் எடுத்த அதிரடி முடிவு! சோகத்தில் குடும்பத்தினர்.

Summary:

New married couple

கொளத்தூர் பகுதியை சேர்ந்தவர் தீபக். இவர் அவரின் சொந்த அத்தை மகளான வேதவள்ளியை காதலித்து இருவீட்டார் சம்மதத்துடன் கடந்த நான்கு மாதங்களுக்கு முன்பு திருமணம் செய்துள்ளார். இருவரும் சந்தோஷமாக தான் வாழ்ந்து வந்துள்ளனர்.

இந்நிலையில் திடீரென ஒரு நாள் வேதவள்ளி தனது காதல் கணவரை வேலைக்கு அனுப்பி விட்டு தனது உடலில் மண்ணெண்ணெய் ஊற்றி தீவைத்துக் கொண்டார். அவரின் அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் மீட்டு அவரை மருத்துவமனையில் சேர்த்துள்ளனர்.

ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி வேதவள்ளி இறந்துள்ளார். இச்செய்தியை கேட்ட தீபக் எலி மருத்தை குடித்து தற்கொலை முயற்சியில் ஈடுப்பட்டுள்ளார். பின்னர் போலீசார் வந்து விசாரணையில் ஈடுப்பட்டுள்ளனர்.

அதன் பிறகு தான் வேதவள்ளி சிறுநீரகத்தில் ஏற்ப்பட்ட கல் அடைப்பால் வலியில் வேதனை பட்டு வந்துள்ளது தெரியவந்துள்ளது. அந்த வலியை தாங்கி கொள்ள முடியாமல் தான் தற்கொலை செய்து கொண்டதாக தெரியவந்துள்ளது. இருப்பினும் மீண்டும் போலீசார் விசாரனை நடத்தி வருகின்றனர். 


Advertisement