செந்தில் பாலாஜி மீது புதிய வழக்கு...!! மத்திய குற்றப்பிரிவு போலீசார் நடவடிக்கை..!!

செந்தில் பாலாஜி மீது புதிய வழக்கு...!! மத்திய குற்றப்பிரிவு போலீசார் நடவடிக்கை..!!



New case against Senthil Balaji... Central Crime Branch police action..

திமுக அமைச்சர் செந்தில் பாலாஜி மீது சென்னை மத்திய குற்றப்பிரிவு காவல் துறையினர் ஊழல் தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

அமைச்சர் செந்தில்பாலாஜியை, அமலாக்க துறையினர், சட்டவிரோத பண பரிவர்த்தனையில் ஈடுபட்டதாக கடந்த ஜூன் மாதம் 14-ஆம் தேதி அதிகாலை கைது செய்தனர்.  

கைது நடவடிக்கையின் போது அவருக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டதால்  மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவரது ரத்தக்குழாயில் அடைப்பு இருந்ததால் அவருக்கு அறுவைசிகிச்சை செய்யப்பட்டு, தற்போது மருத்துவமனையில் ஓய்வு எடுத்து வருகிறார்.

அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டுள்ள செந்தில்பாலாஜியை வரும் 12-ஆம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்குமாறு சென்னை மாவட்ட முதன்மை அமர்வு நீதிபதி உத்தரவிட்டார். இதைத் தொடர்ந்து அவர் நீதிமன்ற காவலில் உள்ளார்.

இதைத்தொடர்ந்து செந்தில் பாலாஜியின் மனைவி, அமலாக்கத்துறை தனது கணவரை சட்டவிரோதமாக கைது செய்துள்ளதாக கூறி தாக்கல் செய்த ஆட்கொணர்வு மனு மீதான வழக்கின் தீர்ப்பு இன்று வெளியாகவுள்ளது.

இந்நிலையில், சென்னை மத்திய குற்றப்பிரிவு காவல் துறையினர், அமைச்சர் செந்தில் பாலாஜி மீது ஊழல் தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர். ஏற்கனவே பணமோசடி பிரிவில் மூன்று வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில், ஊழல் தடுப்பு பிரிவும் சேர்க்கப்பட்டுள்ளது.