தமிழகம்

வாழ விடாமல் தடுத்த பயம்..! நெல்லை இருட்டு கடை அல்வா கடை உரிமையாளர் திடீர் தற்கொலை.!

Summary:

Nellai iruttu katai halwa shop owner suicide

புகழ் பெற்ற நெல்லை இருட்டுக்கடை அல்வா கடை உரிமையாளர் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்திய அளவில் மிகவும் புகழ்பெற்ற கடைகளில் ஒன்று நெல்லை இருட்டுக்கடை அல்வா கடை, இதன் உரிமையாளர் ஹரிசிங். இவருக்கு கடந்த சில நாட்களாக உடலனல கோளாறு இருந்துவந்ததாக கூறப்படுகிறது. கொரோனா அறிகுறிகள் இருந்ததால் இவருக்கு கொரோனா பரிசோதனையும் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

பரிசோதனையின் முடிவில் கொரோனா இருப்பது உறுதியான நிலையில், பாளையங்கோட்டையில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் ஹரிசிங் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். சிகிச்சை நடைபெற்றுவந்த நிலையில் ஹரிசிங் மருத்துவமனையிலையே தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


Advertisement