அரசு மருத்துவமனையின் அலட்சியம்.... காலின் உள்ளே இருந்த கற்களை அகற்றாமல் தையல் போட்ட அவலம்..!

அரசு மருத்துவமனையின் அலட்சியம்.... காலின் உள்ளே இருந்த கற்களை அகற்றாமல் தையல் போட்ட அவலம்..!


Negligence of Govt Hospital... The stones inside the leg were stitched without removing them..!

அறந்தாங்கி அருகே சாலை விபத்தில் காயம் அடைந்தவரின் காலின் உள்ளே இருந்த கற்களை அகற்றாமல் அரசு மருத்துவமனையில் தையல் போடப்பட்டதாக புகார் எழுந்துள்ளது.

புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே ஆவணம் பகுதியில் வசிப்பவர் மதிவாணன். பைக்கில் சென்ற போது கீழே விழுந்ததில் அவருக்கு வலது காலில் அடிப்பட்டது. அறந்தாங்கி அரசு மருத்துவமனைக்கு சென்ற மதிவாணனுக்கு, அங்கிருந்த பணியாளர்களே அவருக்கு காலில் தையல் போட்டதாக கூறப்படுகிறது.

tamil nadu 

இந்நிலையில் வீட்டிற்கு வந்த மதிவாணனனுக்கு காலில் வலி. தொடர்ந்து இருந்துள்ளது. வலி குறையாததால் அறந்தாங்கியில் உள்ள தனியார் மருத்துவமனை சென்றுள்ளார்.
அவருக்கு டாக்டர் எக்ஸ்ரே எடுத்து பார்த்த போது தையல் போட்ட பகுதியின் உள்ளே ஐந்தக்கும் மேற்பட்ட கற்கள் இருந்துள்ளது. மதிவாணன் விபத்தில் கீழே விழுந்த போது தரையில் கிடந்த கற்கள் காலின் உள்ளே இருந்ததை அறந்தாங்கி அரசு மருத்துவமனையில் சுத்தம் செய்யாமல் தையல் போட்டுள்ளனர்.

இதை தொடர்ந்து மதிவாணனுக்கு தனியார் ஹாஸ்பிடலில் ஆப்ரேஷன் செய்து ஐந்துக்கும் மேற்பட்ட கற்கள் அகற்றப்பட்டது. டாக்டர்கள் பணியில் இருந்தும் ஊழியர்கள் சிசிச்சை பார்த்ததால் ஏற்பட்ட அலட்சியமே இது போன்ற சம்பவங்கள் நடப்பதற்கு காரணம் என்றும் இது தொடர்பாக கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தியுள்ளனர்.