8 வயது பாலியல் தொந்தரவு.. பக்கத்து வீட்டுக்காரர் போக்சோவில் கைது.!

8 வயது பாலியல் தொந்தரவு.. பக்கத்து வீட்டுக்காரர் போக்சோவில் கைது.!


Near housemate harassment to school girl in Chennai

சென்னை காசிமேடு பகுதியை சேர்ந்தவர் ரம்யா. இவர் மந்தைவெளியில் உள்ள தனியார் பள்ளியில் துப்புரவு வேலை செய்து வருகிறார். இவர் பெற்றோரை இழந்த உறவினரின் 8 வயது சிறுமியை வளர்த்து வந்துள்ளார்.

harassment

அந்த சிறுமி அதே பகுதியில் உள்ள பள்ளியில் மூன்றாம் வகுப்பு படித்து வருகிறார். இந்த நிலையில் கடந்த 4ம் தேதி சிறுமி வீட்டில் தனியாக இருந்தபோது, பக்கத்து வீட்டை சேர்ந்த ஆறுமுகம் என்பவர் சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்துள்ளார்.

harassment

இதனால் சிறுமி கத்தி கூச்சலிட, ஆறுமுகம் அங்கிருந்து தப்பி ஓடி விட்டார். இந்த சம்பவம் குறித்த ரம்யா ராயபுரம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்த நிலையில், ஆறுமுகத்தை சோக் சோ சட்டத்தின் கீழ் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர்.