மழைநீர் குட்டையில் குரைத்துக்கொண்டு இருந்த நாய்.. 2 சிறுமிகள் நீரில் மூழ்கி பலியான பரிதாபம்.. தமிழகமே சோகம்.!
நாமக்கல் மாவட்டத்தில் உள்ள ராசிபுரம் அத்திபலகானூர் கிராமத்தில் வசித்து வரும் சிறுமிகள் ஜனனி, ரத்னா ஸ்ரீ (வயது 15). இவர்கள் இருவரும் அங்குள்ள பள்ளியில் பத்தாம் வகுப்பு பயின்று வருகிறார்கள்.
இப்பகுதியில் மழைநீர் குட்டை ஒன்று உள்ளது. இந்நிலையில், இன்று இருவரும் மழை நீர் குட்டைக்குச் சென்றுள்ளனர். அப்போது எதிர்பாராத விதமாக அதில் மூழ்கி தத்தளித்ததாக தெரிய வருகிறது.

இருவருக்கும் நீச்சல் தெரியாததால் நீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தனர். பெற்றோர் மகள்களை காணாது தேடியலைந்த நிலையில், குட்டை அருகே நாய் குரைத்துக்கொண்டே இருப்பதை கேட்டு உடல் தேடப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. இந்த விஷயம் தொடர்பாக ராசிபுரம் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
நாமக்கல்.ராசிபுரம் அடுத்த அத்திப்பலகானூர் பகுதியில் உள்ள குட்டையில் குளிக்கச் சென்ற ஜணணி, ரட்சணாஸ்ரீ பள்ளி மாணவிகள் 2 பேர் தண்ணீரில் மூழ்கி பலி...
— GOWRISANKAR B (@b_gowrisankar22) September 10, 2022
அவர்கள் வளர்த்த நாய் தொடர்ந்து குறைந்து கொண்டே இருந்தால் இவர்கள் தண்ணீரில் முழ்கியது தெரியவந்தாக கூறப்படுகிறது.@sunnewstamil pic.twitter.com/a2rwMOBJ9C