தமிழகம்

சீமானுக்கு என்ன ஆச்சு? நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் மருத்துவமனையில் திடீர் அனுமதி!

Summary:

Naam thamilar katchi seemaan admitted in Hospital

நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

நடிகர், இயக்குனர், அரசியல் கட்சி பிரமுகர் என பன்முகத் தன்மையுடன் விளங்கி வருகிறார் சீமான். தமிழ் மக்கள் மற்றும் தமிழ் தேசிய அரசியலை முன்வைத்து திமுக, மற்றும் அதிமுக கட்சிகளுக்கு எதிரான தேசிய அரசியலை வழி நடத்தி வருகிறார் சீமான்.

இந்நிலையில் சீமான் அவர்கள் சென்னை வடபழனியில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். வழக்கமான பரிசோதனைக்காகவே அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும், இன்று இரவே அவர் வீடு திரும்புவார் எனவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.


Advertisement