மாயமான காதல் மனைவி.. அதிர்ச்சியில் உறவினர்கள்... எங்கு சென்றிருப்பார்..?

மாயமான காதல் மனைவி.. அதிர்ச்சியில் உறவினர்கள்... எங்கு சென்றிருப்பார்..?


mysterious-love-wife-shocked-relatives-where-has-he-gon

திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி அருகே உள்ள சீயமங்கலம் பகுதியை சேர்ந்தவர் விநாயகமூர்த்தி- சிந்து தம்பதியினர். இவர்கள் இருவரும் காதலித்து திருமணம் செய்து கொண்டனர். இவர்களுக்கு ஜெயதுர்கா என்ற மகளும் புஷ்பராஜ் என்ற மகனும் உள்ளனர்.

இந்நிலையில் விநாயகமூர்த்தி எலக்ட்ரிக்கல் மற்றும் பிளம்பிங் வேலை செய்து வரும் நிலையில் தனது குடும்பத்துடன் சென்னையை அடுத்த குரோம்பேட்டையில் வசித்து வந்துள்ளார். சம்பவத்தன்று வேலை நிமித்தம் காரணமாக காலையிலே வீட்டை விட்டு சென்றுள்ளார் விநாயகமூர்த்தி. இந்த நிலையில்தான் காலை வழக்கம்போல் தனது மகன் மற்றும் மகளை பள்ளியில் சென்று விட்டு விட்டு வருவதாக கூறிய மனைவி சிந்து மாயமானார்.

Missing case

தனது மனைவி சிந்து வீடு திரும்பவில்லை என்பதை அறிந்த விநாயகமூர்த்தி அவரது தொலைபேசிக்கு அழைப்பு விடுத்துள்ளார். ஆனால் அவரது செல்ஃபோன் ஸ்விட்ச் ஆப் செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. 

இதனால் அதிர்ச்சி அடைந்த விநாயகமூர்த்தி தனது குழந்தைகளுடன் காவல் நிலையம் சென்று புகார் அளித்துள்ளார். புகாரின் அடிப்படையில் விசாரணை நடத்தி வரும் போலீசார் மாயமான சிந்துவை தீவிரமாக தேடி வருகின்றனர்.