தமிழகம்

ஓட்டுனர் மர்ம சாவு; ஏரியில் சடலமாக மீட்கப்பட்ட பரபரப்பு சம்பவம.. நடந்தது என்ன? அதிரவைக்கும் தகவல்.. !

Summary:

ஓட்டுனர் மர்ம சாவு; ஏரியில் மிதந்த சடலம்!,..போலீசார் தீவிர விசாரணை..!

சேலம் அருகே ஓட்டுநர் ஏரியில் சடலமாக கண்டெடுக்கப்பட்ட சம்பவம் குறித்து, காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

சேலம் மாவட்டம் பூலாவரி பகுதியை சேர்ந்தவர் சீனிவாசன். இவரது மகன் கலையரசன்(26). இவர் ஓட்டுநராக வேலை பார்த்து வந்தார். கடந்த திங்கட்கிழமை வீட்டில் இருந்து தனது இருசக்கர வாகனத்தில் புறப்பட்டு சென்ற கலையரசன்  வீடு திரும்பவில்லை. இதனால் கலையரசனின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் அவரை தீவிரமாக தேடி வந்தனர்.

இந்த நிலையில் செவ்வாய்க்கிழமை காலை கிராமத்தில் உள்ள ஏரிக்கரையில் கலையரசனின் இருசக்கர வாகனம் நிற்பதை பார்த்த கிராம மக்கள் ஏரிக்குள் சென்று தேடினர். ஏரிக்குள்ளிருந்து கலையரசனை உயிரிழந்த நிலையில் சடலமாக மீட்டனர். தகவலறிந்த காவல்துறையினர் அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.

விசாரணையில், கலையரசன் கடைசியாக அதே பகுதியை சேர்ந்த கார்த்தி என்பவருடன் சென்றது தெரியவந்தது. இதுகுறித்து கார்த்தியிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டனர். சம்பவத்தன்று மாலை இருவரும் ஏரிக்கு சென்றதாகவும், அப்போது, கலையரசன் ஏரியில் மூழ்கி உயிரிழந்ததாகவும் கார்த்தி தெரிவித்தார். ஆனால் அவர் தெரிவித்த நேரத்திக்கு பின்னர் கலையரசன், அந்த பகுதியில் உள்ள கடைக்கு சென்று வந்ததும், உறவினர் ஒருவருடன் செல்போனில் பேசியதும் தெரிய வந்ததுள்ளது.

இதனால் கார்த்தியின் மீது சந்தேகமடைந்துள்ள கலையரசனின் உறவினர்கள், கலையரசன் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்றும், இதுகுறித்து கார்த்தியிடம் தீவிர விசாரணை மேற்கொள்ள வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளனர்.


Advertisement