தமிழகம்

மக்களுக்கு மீண்டும் ஒரு மகிழ்ச்சி செய்தி ! முதல்வர் மு.க.ஸ்டாலின் புதிய அறிவிப்பு ! முழு விவரம் இதோ ..

Summary:

தமிழக முதல்வரிடம் நேரிடையாக புகார் அளிக்க தமிழக அரசு தனி இணையதளத்தை ஒற்றை துவங்கியுள்ளது.

தமிழக முதல்வரிடம் நேரிடையாக புகார் அளிக்க தமிழக அரசு தனி இணையதளத்தை ஒற்றை துவங்கியுள்ளது.

தமிழக மக்களுக்கு முதல்வராக பதவியேற்ற நாளில் இருந்து பல்வேறு திட்டங்களை தொடங்கிவைத்து மக்களை கவர்ந்துவருகிறார் முதல்வர் ஸ்டாலின். பெண்களுக்கு இலவச பேருந்து பயணம், ஆவின் பால் விலை குறைப்பு என பல்வேறு திட்டங்களை தொடங்கியுள்ளார் முதல்வர். மேலும் கலைஞர் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு  5 வகையான புதிய திட்டங்களையும் முதல்வர் தொடங்கி வைத்து மக்களின் பாராட்டுகளை பெற்றுள்ளார் .

இந்நிலையில் தமிழக முதல்வரிடம் நேரிடையாக  மக்கள் புகார் அளிக்க தமிழக அரசு தனி இணையதளத்தை ஒற்றை துவங்கியுள்ளது.  பொதுமக்கள் தங்கள் குறைகளை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினிம் தெரிவிக்க cmcell.tn.gov.in என்ற தனிப்பிரிவு இணையதளம் தொடக்கபட்டுள்ளது. மேலும், பொதுமக்கள் வழங்கிய புகார்கள் மீது எடுக்கப்பட்ட  நடவடிக்கைகள் குறித்தும் இணையத்தில் உடனடியாக தெரிந்து கொள்ளலாம் எனவும் அறிவிக்கபட்டுள்ளது.


Advertisement