தமிழகம்

மதுபோதையில் திருநங்கைகளை கிண்டல்..! ஆதரவாக வந்த 5 இளைஞர்கள்.! அதன் பின்பு நடந்த துயரச் சம்பவம்.!

Summary:

மயிலாடுதுறையை சேர்ந்த ஐயப்பன் என்பவர் மதுபோதையில் அப்பகுதியை சேர்ந்த திருநங்கைகளை ஆபாசமாக

மயிலாடுதுறையை சேர்ந்த ஐயப்பன் என்பவர் மதுபோதையில் அப்பகுதியை சேர்ந்த திருநங்கைகளை ஆபாசமாக பேசி கிண்டல் செய்ததாக கூறப்படுகிறது. இதனால் மனவேதனையடைந்த திருநங்கைகள் அப்பகுதியில் உள்ள இளைஞர்களிடம் தங்களை ஒருவர் மதுபோதையில் ஆபாசமாக பேசுகிறார் எங்களுக்கு உதவி செய்யுங்கள் என கேட்டுள்ளனர்.

இதனையடுத்து, திருநங்கைகளுக்கு ஆதரவாக ஐயப்பனை 5 பேர் கொண்ட இளைஞர்கள் கண்டிக்க சென்றுள்ளனர். அந்த இளைஞர்கள் சம்பவ இடத்திற்கு சென்று ஐயப்பனிடம் ஏன் இவ்வாறு செய்கிறாய் என கேட்டு கண்டித்துள்ளனர். ஐயப்பன் மதுபோதையில் இருந்ததால் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.

அவர்களுக்கிடையே ஏற்பட்ட வாக்குவாதம் பின்னர் அடிதடியாக மாறியது. ஒருகட்டத்தில் 5 இளைஞர்களும் ஐயப்பனை சரமாரியாக தாக்கியுள்ளனர். இதனால் ஐயப்பன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் உயிரிழந்த ஐயப்பனின் உடலை மீட்டு பிரேதபரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்து 5 பேர் கொண்ட கும்பலை போலீசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


Advertisement