தமிழகம்

நீ செத்தால் தான் எனக்கு திருமணம் நடக்கும்! பெற்ற தாயை கொடூர கொலை செய்த மகன்!

Summary:

Murder amarnath chennai

சென்னை அரும்பாக்கத்தை சேர்ந்தவர் அமர் நாத். 40 வயதான இவர் தன் தாய் சசிகலாவுடன் வசித்து வந்துள்ளனர். அமர்நாத் லாரி ஒட்டுநனராக வேலை செய்து வருகிறார். இவர் குடிப்பழக்கத்திற்கு அடிமையானவர். எனவே குடிப்பதற்கு தன் தாயிடம் சண்டையிட்டு பணத்தை வாங்கி செல்வார்.

அதுமட்டுமின்றி தனக்கு திருமணம் செய்து வைக்குமாறு அடிக்கடி தன் தாயை தொந்தரவு செய்துள்ளார். ஆனால் அவரது தாய் அவற்றை கண்டு கொள்ளவில்லை. திடிரென ஒரு நாள் இதேபோல் தன் தாயிடம் வாக்குவாதத்தில் ஈடுப்பட்டுள்ளார்.

அப்போது அமர்நாத் நீ செத்தால் தான் எனக்கு திருமணம் நடக்கும் என கூறி தன்தாயை கத்தியால் குத்தி, மண்ணெண்ணெய் ஊற்றி கொலை செய்துள்ளார். இதனையடுத்து போலீசார் அவரை கைது செய்துள்ளனர்.

விசாரனையில் கொலைசெய்யப்பட்டது உறுதியான நிலையில் அவருக்கு நீதிமன்றம் ஆயுள் தண்டனையும், 5 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்டது. 


Advertisement