வாகன ஓட்டிகளின் கண்கள் பறிபோகும் அபாயம்.! பாதுகாப்பின்றி கண்ணாடி துகள்களை ஏற்றிச்சென்ற லாரியை மடக்கி பிடித்த நாடாளுமன்ற உறுப்பினர்.!

வாகன ஓட்டிகளின் கண்கள் பறிபோகும் அபாயம்.! பாதுகாப்பின்றி கண்ணாடி துகள்களை ஏற்றிச்சென்ற லாரியை மடக்கி பிடித்த நாடாளுமன்ற உறுப்பினர்.!


MP kathir anandh stopped unsafe lorry


நேற்று காலை சென்னை பெங்களூரு தேசிய நெடுசாலையில் வேலூர் மாவட்டம், சத்துவாச்சாரி அருகே ஒரு திருமண நிகழ்சிக்காக வேலூர் தொகுதி பாராளுமன்ற உறுப்பினர் திரு.D.M.கதிர் ஆனந்த் MP அவர்கள் சென்று கொண்டிருந்துள்ளார். அப்போது கதிர் ஆனந்தின் காருக்கு முன்னே லாரி ஒன்றில் நொறுங்கிய கண்ணாடி தூள்களை ஏற்றுக்கொண்டு அதனை மூடாமல் பாதுகாப்பற்ற முறையில் அந்த லாரி வேகமாக சென்று கொண்டிருந்தது.

லாரியில் இருந்து கண்ணாடி துகள்கள் சிதறி சாலையில் விழுவதை கவனித்த நாடாளுமன்ற உறுப்பினர் கதிர் ஆனந்த் MP அவர்கள் அந்த லாரியை முந்தி சென்று மடக்கி பிடித்து நிறுத்தினார். இதனையடுத்து ஓட்டுநரை கீழே இறங்கச் சொல்லி. இப்படி பாதுகாப்பு அற்ற முறையில் கண்ணாடி துகள்களை ஏற்றி செல்கிறீர்கள். உங்கள் வாகனத்திற்கு பின்னால் வரும் வாகன ஓட்டிகளின் கண்களில் கண்ணாடி துகள்கள் பட்டால் கண்கள் பறிபோகும் வாய்ப்புகளை ஏற்படுத்தும் என அறிவுரை கூறினார்

இதனையடுத்து அதிகாரிகளுக்கு தொடர்பு கொடுத்து சம்பவ இடத்திற்கு வரவழைத்து உரிய நடவடிக்கையை எடுக்க வைத்தார். இதுதொடர்பான வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. பாராளுமன்ற உறுப்பினர் திரு.D.M.கதிர் ஆனந்த் MP அவர்கள் செய்த செயலை பலரும் பாராட்டி வருகின்றனர்.