BREAKING: மீண்டும் மீண்டுமா.... ஜனநாயகன் பட வழக்கில் உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு..!!
பயங்கர விபத்து.! மகனை மார்போடு அணைத்து காப்பாற்றிவிட்டு, தன் உயிரை விட்ட தாய்.! கலங்கவைக்கும் சம்பவம்.!
திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை அருகே பெரிய கம்மியம்பட்டு என்ற பகுதியை சேர்ந்தவர் ஆஞ்சிநேயன். இவரது மகள் 27 வயது நிறைந்த சந்திரலேகா. இவரது 3 மாத குழந்தைக்கு உடல்நலம் பாதிக்கப்பட்டிருந்த நிலையில் ஆஞ்சிநேயன் சந்திரலேகா மற்றும் 3 மாத கை குழந்தையை இருசக்கர வாகனத்தில் மருத்துவமனைக்கு
அழைத்து சென்றுள்ளார்.
இருசக்கர வாகனம்
தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்தபோது எதிரே வேகமாக வந்த அடையாளம் தெரியாத வாகனம் ஒன்று அதில் மோதியது. ஆஞ்சிநேயன் மற்றும் சந்திரலேகா தூக்கி வீசப்பட்டு படுகாயமடைந்தனர். இந்த நிலையிலும் சந்திரலேகா தனது குழந்தையை கீழே விழாமல் தன் மார்போடு இறுக அணைத்து எந்த காயமும் இல்லாமல் காப்பாற்றினார்.
-pnafl.jpeg)
பின்னர் படுகாயமடைந்த ஆஞ்சநேயன் மற்றும் சந்திரலேகாவை அருகில் இருந்தவர்கள் மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். ஆனால் சந்திரலேகா சிகிச்சை பலன் இல்லாமல் பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். தன் 3 மாத குழந்தையை பத்திரமாகக் காப்பாற்றிவிட்டு தாய் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.