தமிழகம் உலகம்

சாப்பாடு இல்லை, கழிவறையில் சித்ரவதை! காப்பாற்றுங்க.. கண்ணீருடன் இளைஞர் வெளியிட்ட வீடியோ! தாய் எடுத்த அதிரடி முடிவு!

Summary:

mother request to rescue son

ராமநாதபுரம் மாவட்டம் உசிலங்காட்டுவலசை என்ற பகுதியை சேர்ந்தவர் ராமநாதன். இவரது மனைவி பஞ்சவர்ணம். இவர் உசிலங்காட்டுவலசை ஊராட்சித் தலைவர் கண்ணம்மாள் மருங்கப்பன் என்பவரின் தலைமையில் உறவினர்கள் மற்றும் கிராமத்தினருடன் மாவட்ட ஆட்சியர்  அலுவலகத்திற்கு சென்று மனு ஒன்றை அளித்துள்ளார்.

அந்த மனுவில் அவர், எனது மகன் செல்வராஜ். 23 வயது நிறைந்த அவர் டிரைவராக பணியாற்றி வந்தார். இந்நிலையில் அவர் கடந்த நவம்பர் மாதம் டிரைவர் வேலைக்காக கத்தார் நாட்டுக்கு சென்றார். அவர் அங்கு தனியார் பள்ளியில் வாகன டிரைவராக பணியில் சேர்ந்துள்ளார். பின்னர் பள்ளி விடுமுறை சமயத்தில் அவர் நபர் ஒருவரிடம் டிரைவராக மாற்றுபணிக்கு சென்றுள்ளார். அப்போது வழிதெரியாமல் மாறி சென்றுள்ளார். இதில் ஆத்திரமடைந்த கார் உரிமையாளர் எனது மகனை கண்டித்து அடித்து துன்புறுத்தியுள்ளார்.

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

அதுமட்டுமின்றி ஊதியம் தராமல், பாஸ்போர்ட்டை வாங்கிக்கொண்டு காவல்துறையில் புகார் அளித்துள்ளார். மேலும் பாஸ்போர்ட்டை முடக்கி வைத்துவிட்டதால் எனது  மகனால் வெளியே செல்ல முடியவில்லை. மேலும் கழிவறையிலேயே பூட்டி வைத்து  கொத்தடிமையை போல கொடுமைப்படுத்தி வந்துள்ளனர்.

இதன்பின்னர் அங்கிருந்து தப்பித்த அவர் கத்தார் நாட்டில் வேறு வேலைக்கு செல்ல முடியாமல், சொந்த ஊருக்கு வரமுடியாமல் அங்கேயே சுற்றிதிரிந்துள்ளார். பின்னர் நண்பர் ஒருவர் அவரை மீட்டு ஒருமாதமாக உதவி செய்து வருகிறார். இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு தனது நிலைமையை கூறி அவர் வாட்ஸ்-அப்பில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.  உணவுக்கு கூட வழியில்லாமல் சொந்த ஊருக்கு வர முடியாமல் தவிக்கும் எனது மகனை உடனடியாக மீட்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார்.
 


Advertisement