தமிழகம்

மீன் குழம்பினால் ஒரு குடும்பமே சீரழிந்த அவலம்! இதுக்காக இப்படியா செய்வது?

Summary:

Mother killed their two sons in vilupuram

இதற்காகவெல்லாம் கொலை, தற்கொலை செய்வார்களா என கேட்டும் அளவிற்கு நாட்டில் ஒருசில விஷயங்கள் அரங்கேறி வருகின்றன. அந்த வகையில் மீன்குழம்பு செய்து தருமாறு மருமகளிடம் மாமியார் கேட்க, அதனால் ஏற்பட்ட சண்டையில் பெற்ற குழந்தைகளுக்கு விஷம் கொடுத்துள்ளார் விழுப்புரத்தை சேர்ந்த பெண் ஒருவர்.

விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் சந்தைமேடு பகுதியை சேர்ந்தவர் பிரபு. இவரது மனைவி அம்மு. இவர்களுக்கு 2 மற்றும் 8 வயதில் இரு மகன்கள் இருந்தனர். உடல்நல குறைவால் பிரபு இரண்டு மாதங்களுக்கு முன்பு இறந்துவிட்டார். இந்நிலையில் தனது குழந்தைகளுடன் மணியார் வீட்டில் வசிவந்துள்ளார் அம்மு.

இந்நிலையில்  மருமகள் அம்முவிடம் தனக்கு மீன் குழம்பு சமைத்து தரும்படி கேட்டுள்ளார். இதனால் அவர்கள் இருவருக்கும் இடையே சண்டை ஏற்பட்டுள்ளது. ஒருகட்டத்தில் மனமுடைந்த அம்மு தனது இரண்டு குழந்தைகளுக்கும் விஷம் கொடுத்துவிட்டு தானும் விஷம் குடித்துள்ளார்.

அதனை தொடர்ந்து ஆபத்தான நிலையில் இருந்த அம்மு மற்றும் அவரது குழந்தைகளை மருத்துவமையில் சேர்த்துள்ளனர். ஆனால், குழந்தைகள் இருவரும் இறந்துவிட, அம்மு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார்.


Advertisement