பெற்ற தாய் என்றும் பாராமல் பாலியல் தொல்லை கொடுத்த மகன்... தாயார் எடுத்த அதிரடி முடிவு... கடைசியில் நிகழ்ந்த பரபரப்பு சம்பவம்!!

பெற்ற தாய் என்றும் பாராமல் பாலியல் தொல்லை கொடுத்த மகன்... தாயார் எடுத்த அதிரடி முடிவு... கடைசியில் நிகழ்ந்த பரபரப்பு சம்பவம்!!


mother-killed-her-son-in-thani

தேனி மாவட்டம் கம்பம் நகரில் காமயகவுண்டன்பட்டி சாலையில் வசித்து வந்தவர் கனகமணி(62). இவருக்கு வேல்முருகன் என்ற மகன் உள்ளார். வேல்முருகன் குடி மற்றும் கஞ்சா பழக்கத்திற்கு அடிமையானதால் அவரது மனைவி ரோஜா வேல்முருகனை பிரிந்து தனிமையில் வசித்து வந்துள்ளார்.

இந்நிலையில் வேல்முருகன் தனது தாய் கனகமணியுடன் வசித்து வந்துள்ளார். குடி மற்றும் கஞ்சாவிற்கு அடிமையான வேல்முருகன் போதையில் பெற்ற தாய் என்று கூட பாராமல் தொடர்ந்து பாலியல் தொல்லை கொடுத்து வந்துள்ளார். மகனின் பாலியல் தொல்லை நாளுக்கு நாள் அதிகமானதால் இச்சம்பவம் குறித்து தனது சகோதரர் மற்றும் சகோதரியின் கணவரிடம் கூறி புலம்பி அழுத்துள்ளார் கனகமணி.

thani

அவர்கள் வேல்முருகனை அழைத்து எச்சரித்து அனுப்பியுள்ளனர். இருப்பினும் தொடர்ந்து பாலியல் தொல்லை கொடுத்து வந்திருக்கிறார். இதனால் கோபமான கனகமணி தனது சகோதரர் கண்ணன் மற்றும் சகோதரி கணவர் கருப்பையா ஆகியோருடன் சேர்ந்து மகனை தீர்த்து கட்ட முடிவு செய்துள்ளார்.

அதனையடுத்து மதுபோதையில் வேல்முருகன் தூங்கி கொண்டிருந்த நேரத்தில் மூன்று பேரும் சேர்ந்து கழுத்தை நெரித்து கொலை செய்து விட்டு மதுபோதையில் தற்கொலை செய்து கொண்டதாக நாடகம் ஆடியுள்ளனர். இறுதிச் சடங்குகள் முடிந்து மின் மயானத்திற்காக வேல்முருகன் உடலை கொண்டு சென்றிருக்கிறார்கள்.  அப்போது திடீரென்று போலீசார் குறுக்கிட்டு, அவரது உடலை பிரேத பரிசோதனை செய்ய வேண்டும் என்று கம்பம் அரசு மருத்துவமனைக்கு எடுத்துச் சென்றிருக்கிறார்கள். 

thani

அதன் பின்னர் வேல்முருகனின் தாயார் கனகமணியிடம் விசாரணை மேற்கொண்டதில் பெற்ற தாய் என்று கூட பார்க்காமல் தொடர் பாலியல் தொல்லை கொடுத்து வந்ததால் சகோதரன் மற்றும் சகோதரியின் கணவருடன் சேர்ந்து கொலை செய்ததை ஒப்பு கொண்டுள்ளார். அதனையடுத்து போலீசார் கண்ணன், கருப்பையா மற்றும் கனகமணி ஆகிய மூன்று பேரையும் கைது செய்துள்ளனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.