தமிழகம்

வீட்டு படுக்கையறையில் மர்மமான முறையில் இறந்து கிடந்த 9 வயது மகள்! விசாரணையில் தந்தைக்கு காத்திருந்த பேரதிர்ச்சி! வெளியான பகீர் பின்னணி!

Summary:

Mother killed 9 year daughter for illegal affairs

உத்தரப்பிரதேச மாநிலம், தர்யாபாத் கிராமத்தில் வசித்து வந்தவர் மகேஷ். இவரது மனைவி மோனி. இவர்களுக்கு அன்ஷிகா என்ற 9 வயது மகள் இருந்தார். இந்நிலையில் சமீபத்தில் அன்ஷிகா தனது வீட்டு படுக்கையறையில் மர்மமான முறையில் இறந்து கிடந்துள்ளார். பின்னர் வயல் வேலைக்காக சென்று வீடு திரும்பிய மகேஷ்,  மகள் கிடக்கும் நிலையை கண்டு அதிர்ச்சியடைந்து கதறியுள்ளார் 

இந்நிலையில் மகள் எவ்வாறு இறந்தாள் என தனக்கு தெரியாது என மோனியும் கூறியுள்ளார். அதனைத் தொடர்ந்து இதுகுறித்து போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்ட நிலையில் சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் சிறுமியின் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

அதனைத் தொடர்ந்து போலீசார் அவரது குடும்பத்தினரிடம் தீவிர விசாரணை மேற்கொண்ட நிலையில் அவரது தாய் அளித்த பதில் முன்னுக்கு பின் முரணாக இருந்துள்ளது. இந்நிலையில் சந்தேகமடைந்த போலீசார் அவரிடம் கிடுக்கிபிடி விசாரணை மேற்கொண்டுள்ளனர். அப்பொழுது அவர் தான்தான் தனது மகள் அன்ஷிகாவை கொன்றதை ஒப்புக்கொண்டார். 

இதுகுறித்து அவர் அளித்த வாக்குமூலத்தில், எனக்கும் தேவிபிரசாத் என்பவருக்கும் தகாத தொடர்பு இருந்தது. மேலும் எனது கணவர் வெளியே சென்றபோது தேவிபிரசாத் வீட்டிற்கு வந்தார். இந்நிலையில் தாங்கள் இருவரும்  தனிமையில் இருந்ததை கண்ட அன்ஷிகா இதுகுறித்து தனது அப்பாவிடம் சொல்லபோவதாக கூறினார்.இதனால் பயந்துபோன நான் பிரசாத் மற்றும் அவரது நண்பர்களுடன் சேர்ந்து அன்ஷிகாவின் கழுத்தை நெரித்து கொலை செய்தோம் என்று கூறியுள்ளார். இதனைத்தொடர்ந்து போலீசார் மோனி, பிரசாத் உள்ளிட்ட நால்வர் மீது வழக்குபதிவு செய்து அவர்களை கைது செய்துள்ளது. இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


Advertisement