நள்ளிரவில் தாய் கொடுத்த குளிர்பானத்தை குடித்து உயிரிழந்த குழந்தைகள்! வெளியான மனதை நொறுக்கும் பகீர் காரணம்!

நள்ளிரவில் தாய் கொடுத்த குளிர்பானத்தை குடித்து உயிரிழந்த குழந்தைகள்! வெளியான மனதை நொறுக்கும் பகீர் காரணம்!



mother-killed-2-little-children-for-husbad-problem

தேனி மாவட்டம் சின்னமனூர் அருகே கன்னிசேர்வைபட்டி என்ற பகுதியில் வசித்து வருபவர் பிரபு. இவர் சொந்தமாக சரக்கு லாரி ஒன்றை வைத்துள்ளார். இவருக்கு ஆனைமலையன்பட்டி பகுதியைச் சேர்ந்த பவித்ரா என்பவருடன் கடந்த 7 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு தர்னீஸ் என்ற 7 வயது ஆண் குழந்தையும் லக்சன் என்ற ஒன்றரை வயது ஆண் குழந்தையும் உள்ளனர். இந்நிலையில் குடிப்பழக்கத்திற்கு அடிமையான பிரபு அடிக்கடி குடித்து விட்டு வந்து பவித்ராவிடம் சண்டை போட்டு வந்துள்ளார். 

இவ்வாறு சமீபத்திலும் பவித்ரா சண்டை போட்டுகொண்டு தாய்வீட்டிற்கு சென்றநிலையில், கடந்த இரு தினங்களுக்கு முன்புதான் பிரபுவின் வீட்டிற்கு வந்துள்ளார். இந்த நிலையில் நேற்று முன்தினம் பிரபு லோடு ஏற்றிக்கொண்டு பாண்டிச்சேரிக்கு சென்றநிலையில், பவித்ரா வீட்டில் தனது மாமனார், மாமியார் மற்றும் குழந்தைகளுடன் இருந்துள்ளார். அப்பொழுது பவித்ரா நேற்று இரவு 11 மணியளவில் பாட்டியுடன் தூங்கிக் கொண்டிருந்த தனது பிள்ளைகளை அறைக்கு அழைத்துச் சென்றுள்ளார். அங்கு குளிர்பானத்தில் திராட்சை பழங்களுக்கு தெளிக்கும் பூச்சி மருந்தை கலந்து குழந்தைகள் இருவருக்கும் கொடுத்துள்ளார். மேலும் அதனை அவரும் குடித்துள்ளார்.

mother killed

பின்னர் அவர் அதே பகுதியில் வசித்துவரும் தனது தாய்மாமா செந்திலுக்கு போன் செய்து தான் விஷம் கொடுத்ததை குறித்து கூறியுள்ளார். இதையடுத்து பதறியடித்துக் கொண்டு செந்தில் பவித்ராவின் வீட்டிற்கு சென்று  அவரது மாமனார் மற்றும் மாமியாரிடம் நடந்தவற்றைக் கூறியுள்ளார். பின்னர் பவித்ராவின் அறைகதவைத் தட்டியபோது அவரே திறந்துள்ளார். அங்கு உள்ளே குழந்தைகள் இருவரும் சடலமாக கிடந்துள்ளனர். இந்நிலையில் பவித்ரா விஷம் கலந்த குளிர்பானத்தை குடித்த நிலையில் வாந்தி எடுத்ததாக கூறப்படுகிறது. 

அதனைத் தொடர்ந்து அக்கம்பக்கத்தினர் பவித்ராவை மருத்துவமனையில் அனுமதித்தனர். மேலும் சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் குழந்தைகளின் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
மேலும் போலீசார் தற்போது பவித்ரா மீது கொலைவழக்கும், அவரது கணவர் மீது தற்கொலை மற்றும் கொலைக்கு தூண்டுதல்  போன்றவற்றிற்கும் வழக்கு பதிவு செய்துள்ளனர்.