மருத்துவமனைக்கு செல்லும் வழியில் மகனின் கண்முன்னே தாய்க்கு நேர்ந்த துயரம்.. நெஞ்சை உலுக்கும் சோகம்..!!mother dead infront of son

 

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள சங்கராபுரம் மூக்கனூர் கிராமத்தைச் சார்ந்தவர் சின்னபையன். இவரது மனைவி சாரதாம்பாள் (வயது 65). இவர் உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டிருந்த நிலையில், தனது மகன் அரவிந்துடன் இருசக்கரவாகனத்தில் மருத்துவமனைக்கு சென்றுள்ளார்.

அந்த சமயத்தில் எதிர்பாராதவிதமாக இருசக்கரவாகனத்தில் இருந்து தவறி விழுந்தவர், தலையில் படுகாயம் அடைந்திருக்கிறார். அத்துடன் மகனால் மீட்கப்பட்டவர் சேலம் அரசு மருத்துவமனையில் அனுமதி செய்யப்பட்ட நிலையில், அவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்துள்ளார். 

tamilnadu

மேலும், இந்த விஷயம் தொடர்பாக வழக்குபதிவு செய்துள்ள சங்கராபுரம் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். மகனின் கண்முன்னே தாய் தவறிவிழுந்து உயிரிழந்த இந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.