தமிழகம் காதல் – உறவுகள்

ஒரு ஐஸ்க்ரீம் சாப்பிட்டதால் இப்படியொரு நிலைமையா? 16 வயது மகளுடன் தாய் எடுத்த அதிர்ச்சி முடிவு!!

Summary:

mother commit suicide with daughter

நாமக்கல் மாவட்டம் நெய்க்காரன்பட்டி பகுதியில் கடந்த ஒரு சில தினங்களுக்கு முன்பு அதிகாலை தாய் மற்றும் மகள் இருவரும் ரயில் தண்டவாளத்தில் உடல் சிதறி சடலமாக கிடந்துள்ளனர்.

இதை தொடர்ந்து, இதுகுறித்து போலீசாருக்கு தகவலளிக்கப்பட்ட நிலையில் அங்கு விரைந்த போலீசார் சடலமாக கிடந்த 2 பேரின் உடல்களையும் மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.அதனை தொடர்ந்து அவர்கள் தீவிர விசாரணை மேற்கொண்டதில் உயிரிழந்தவர்கள்அப்பகுதியை சேர்ந்த கண்ணையன் என்பவருடைய மனைவி கண்ணகி, மற்றும் அவரது 16 வயது மகள் அகல்யா என்பது தெரியவந்தது.

மேலும் சமீபத்தில் அவர்கள் ஊரில் நடைபெற்ற கோவில் திருவிழாவில் கண்ணகி மற்றும் அகல்யா இருவரும் ஐஸ்கிரீம் வாங்கி சாப்பிட்டுள்ளனர். அப்பொழுது அங்கு வந்த நபர் ஒருவர் கண்ணையனுக்கு ஐஸ்க்ரீம் வாங்கி கொடுக்கவில்லையா? என கேலியாக கேட்டுள்ளார்.

அதற்கு கண்ணகியும், அவர் சாராயம் தான் குடிப்பார் என கிண்டலாக பதிலளித்துள்ளார். இந்நிலையில் இதுகுறித்து கன்னையனுக்கு தெரியவந்த நிலையில், ஏன் அவ்வாறு சொன்னாய். மற்றவர்கள் முன்னால் என்னை அசிங்கப்படுத்துறியா என மனைவியுடன் கடுமையாக சண்டை போட்டுள்ளார்.

train track க்கான பட முடிவு

இந்த வாக்குவாதம் முற்றவே இதனால் மனமுடைந்த கண்ணகி, தனது மகளுடன் வீட்டை விட்டு வெளியேறி ரயில் தண்டவாளத்தில் தற்கொலை செய்து கொண்டுள்ளனர் என கூறப்படுகிறது.இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
 


Advertisement