பாத்ரூமில் குளித்த சிறுமிக்கு பாலியல் தொல்லை.. தாயின் 2-வது கணவர் கைது.!
சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த தாயின் இரண்டாவது கணவர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளார்.
சென்னை ஆவடியை சேர்ந்த 13 வயது சிறுமி அதே பகுதியில் உள்ள அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் எட்டாம் வகுப்பு படித்து வருகிறார். சிறுமியின் தாயின் முதல் கணவர் பிரிந்து சென்ற நிலையில், தற்போது இரண்டாவது கணவரான பாவா பக்ருதீன் (வயது 39) என்பவருடன் வசித்து வருகிறார்.
மாற்றுத்திறனாளியான 2வது கணவருடன், சிறுமி வீட்டில் தனியாக இருக்கும் போது அடிக்கடி பாலியல் சீண்டலில் ஈடுபட்டுள்ளார்.
இதில் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு பாவா பக்ருதீன் செல்போன் கேமராவை ஆன் செய்து பாத்ரூமில் வைத்துள்ளார். அப்போது சிறுமி பாத்ரூமில் குளித்துக் கொண்டிருந்தபோது அங்கு செல்போன் கேமரா ஆன் செய்யப்பட்டிருப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தார்.
இதனையடுத்து உடனடியாக தனது தாயிடம் தனக்கு நடந்தவற்றையெல்லாம் அழுது கொண்டே கூறியுள்ளார். இதனைக் கேட்டு அதிர்ச்சியும் மாத்திரம் அடைந்த சிறுமியின் தாய் ஆவடி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
அந்த புகாரின் அடிப்படையில் சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த பாவா பக்ருதீன் போகோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து கைது செய்தனர். மேலும் திருவள்ளூர் மகளிர் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி புழல் சிறையில் அடைத்தனர்.