தமிழகம்

திருச்சியில் மீண்டும் கோடி கணக்கில் கொள்ளை! அதிர்ச்சி சம்பவம்!

Summary:

money theft in trichy bank

திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் பாரத் மிகுமின் நிலைய (BHEL) வளாகத்தில் கூட்டுறவு வங்கி ஒன்று இயங்கி வருகிறது. அங்கு பணிபுரியும் ஊழியர்களுக்கு வசதியாக  அந்த வங்கியை ஒட்டி ஏடிஎம் இயந்திரமம் வைக்கப்பட்டு, அது 24 மணிநேரமும் பாதுகாவலர்கள் மூலம் கண்காணிக்கப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் இன்று காலை வழக்கம்போல் ஊழியர்கள் வங்கிக்கு வந்தபோது, அங்கு பணம் வைக்கப்பட்டிருந்த பாதுகாப்பு பெட்டி திறந்து கிடப்பதை பார்த்து அதிர்ச்சியடைந்தனர். மேலும் அந்த அறையில் இருந்த ஜன்னலின் ஸ்குரூ அகற்றப்பட்டு ஜன்னல் திறந்த நிலையில் இருந்தது.

அடுத்தடுத்து 3-வது சம்பவம்: திருச்சி பெல் வங்கியில் ரூ.1½ கோடி கொள்ளை

அங்கு ஒரு கோடியே 47 லட்சம் திருடப்பட்டுள்ளதை அறிந்த வங்கி அதிகாரிகள், அதுகுறித்து காவல்துறைக்கு  தகவல் கொடுத்தனர். தகவல் அறிந்து சம்பவம இடத்திற்கு மோப்ப நாய், கைரேகை நிபுணர்களுடன் விரைந்த போலீசார், வங்கி ஊழியர்களிடம் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் அங்கு பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராவை ஆய்வு செய்ததில் கொள்ளையன் ஒருவன் முகமூடி அணிந்து பணத்தை திருடி சென்றதாக போலீசார் கூறியுள்ளனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


Advertisement