தமிழகம்

அரசுப் பேருந்தில் அனாதையாக கிடந்த பல கோடி ரூபாய் பணம்!! விழி பிதுங்கிய பயணிகள்!!

Summary:

money in govt bus


பரபரப்பான அரசியல் சூழ்நிலையில், வரும் மக்களவை தேர்தலுக்காக அணைத்து கட்சியினரும் தீவிரமாக தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டுவருகின்றனர். அதேபோல் தேர்தலில் முறைகேடுகள் ஏதும் நடக்காமல் பார்த்துக்கொள்ள தேர்தல் ஆணையம் தீவிரமாக கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றது.

இந்தநிலையில், தருமபுரி மாவட்டம் அரூர் அருகே நடைபெற்ற வாகன சோதனையில் அரசுபேருந்தில் கேட்பாரற்றுக் கிடந்த பைகளில் இருந்து 3 கோடியே 47 லட்சம் ரூபாய் தேர்தல் பறக்கும் படையினரால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. பேருந்தில், தேர்தல் பறக்கும் படையினர் நடத்திய சோதனையில் 7 பைகள் கேட்பாரற்று கிடந்ததால் அது குறித்து விசாரணை ‌நடத்தப்பட்டது. 

rs-3-crore-seized-in-government-bus

ஆனால் பேருந்தில் உள்ளவர்கள் யாரும் அங்கு கிடந்த பைகளுக்கு உரிமை கோரவில்லை. அந்த பைகளில் மொத்தம், 3.5 கோடி அளவில் இருந்த பணத்தை தேர்தல் பறக்கும் படையினர் கருவூலத்தில் ஒப்படைத்தனர்.

இந்தநிலையில், பணம் கொண்டுவரப்பட்ட பையில் இருந்து அடையாள அட்டையும், வங்கி கணக்கு புத்தகமும் கண்டெடுக்கப்பட்டுள்ளது. அவை திருவண்ணாமலையைச் சேர்ந்த ரமேஷ் என்பவருடையது எனத் தெரியவந்துள்ளது. மேலும், இதுகுறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


Advertisement