பாலூட்டிய போது குழந்தை இறந்துவிட்டது என்று சொன்னதெல்லாம் பொய்!. கொடூரதாய் குழந்தையை என்ன செய்தார் தெரியுமா?

பாலூட்டிய போது குழந்தை இறந்துவிட்டது என்று சொன்னதெல்லாம் பொய்!. கொடூரதாய் குழந்தையை என்ன செய்தார் தெரியுமா?


mom killed her girl baby

பச்சிளம் குழந்தையை தரையில் அடித்து, கொடூரமாக கொன்று விட்டு, பாலூட்டியபோது மூச்சுத்திணறி குழந்தை இறந்துவிட்டதாக தாய் நாடகமாடிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை காசிமேட்டில் வசித்து வருபவர் சத்யராஜ். இவர் மனைவி செலஸ்டின்.இவர்களுக்கு  நிஷாந்தி என்ற பெண் குழந்தை உள்ளது. இந்த நிலையில் மீண்டும் கருவுற்ற செலஸ்டினுக்கு கடந்த மாதம் மீண்டும் பெண் குழந்தை பிறந்தது. அந்த குழந்தை சமீபத்தில் திடீரென இறந்தது.

மேலும் குழந்தை பாலூட்டியபோது  மூச்சுத்திணறல் ஏற்பட்டு இறந்து விட்டதாக செலஸ்டின் கதறியுள்ளார். பின்னர்  இதுகுறித்து பொலிசார் வழக்குப்பதிவு செய்து குழந்தையின் உடலை பிரேத பரிசோதனைக்காக ஸ்டான்லி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

born baby

மேலும் பிரேத பரிசோதனைக்கு பின் வெளியான அறிக்கையில், குழந்தையின் பின்னந்தலையில் பலத்த காயம் ஏற்பட்டு, குழந்தை இருந்ததாக தெரிய வந்தது.
இதனையடுத்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டதில் என் நான் தான் குழந்தையை தரையில் அடித்து கொலை செய்ததை ஒப்புக்கொண்டார் மேலும் அவர் அளித்த வாக்குமூலத்தில்,

எனது கணவர் சத்யராஜூக்கு   ஏற்கனவே ஜெயந்தி என்ற பெண்ணுடன் திருமணம் நடைபெற்று, அவளுக்கு 3 வயதில் ஒரு குழந்தை இருக்கிறது.

அதனை மறைத்து சத்யராஜ் என்னை 2–வதாக திருமணம் செய்து கொண்டது பெரும் வெறுப்பை ஏற்படுத்தியது.

மேலும் ஏற்கனவே1½ வயதில் பெண் குழந்தையை வைத்துக்கொண்டு நான் கஷ்டப்பட்டு கொண்டிருந்த நிலையில், இந்த குழந்தையையும் வளர்ப்பது கஷ்டம். எனவே அந்த குழந்தையை கொன்று விடலாம் என்று முடிவு செய்து குழந்தையின் காலை பிடித்து, தரையில் ஓங்கி அடித்தேன். இதில் குழந்தை அலறி துடித்து சிறிது நேரத்தில் இறந்துவிட்டது. பின்னர்குழந்தை பால் குடிக்கும்போது மூச்சுத்திணறல் ஏற்பட்டு இறந்துவிட்டதாக குடும்பத்தினர் மற்றும் அனைவரிடமும் நாடகமாடினேன் என  கூறியுள்ளார்.