தமிழகம்

உல்லாசத்திற்காக பெற்ற மகனை கள்ளக்காதலனுடன் சேர்ந்து கொலை செய்த கொடூர தாய்!

Summary:

mom killed her child for illegal affairs


வேலூர் மாவட்டம், வ.உ.சி நகரை சேர்ந்த ராமச்சந்திரன் என்பவருக்கும் வாலாஜா அருகே வன்னிவேடை சேர்ந்த காவியா என்ற பெண்ணிற்கும் 5 ஆண்டுகளுக்கு முன் திருமணம் நடந்தது. இந்த தம்பதியினருக்கு 5 வயதில் த‌ருண் என்ற மகன் இருந்தார். இந்தநிலையில் இருவருக்கும் ஏற்பட்ட பிரச்சனை காரணமாக 2 ஆண்டுகளுக்கு முன்பு காவியா கணவரை பிரிந்து அவரது மகனுடன் வாடகை வீட்டில் வசித்து வந்துள்ளார்.

அதே பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் தருண் யுகேஜி படித்து வந்துள்ளான். அப்போது, காவ்யாவிற்கும், ராணிப்பேட்டை பகுதியை சேர்ந்த தியாகராஜன் என்பவருக்கும் பழக்கம் ஏற்பட்டது. இந்த விஷயம் ராமச்சந்திரனுக்கு தெரியவந்ததால் காவ்யாவிடம் சென்று தனது மகனை தன்னிடம் ஒப்படைக்கும்படி கேட்டுள்ளார். ஆனால், காவ்யா, மறுத்துள்ளார்.

2-வது திருமண வாழ்க்கைக்கு, குழந்தை தருண் இடையூறாக இருப்பதாக கருதிய தியாகராஜனும், காவியவும் சேர்ந்து, தருணை நீரில் மூழ்கடித்து கொலை செய்து, குழந்தையின் சடலத்தை ஆற்காடு டெல்லிகேட் அருகே உள்ள பாலாற்றில் புதைத்தனர்.

இதுகுறித்து தகவலறிந்த வாலாஜா போலீசார் நேற்று முன்தினம் காவியாவிடம் விசாரணை நடத்தினர். அதில், காதலுக்கு இடையூறாக இருந்ததால் தியாகராஜனுடன் சேர்ந்து குழந்தை தருணை கொலை செய்ததாக கூறி, புதைத்த இடத்தை காவல்துறையினரிடம் காவியா அடையாளம் காட்டியுள்ளார். இதையடுத்து தருணின் சடலத்தை வெளியே எடுத்து பிரேத பரிசோதனை செய்தனர். மேலும் தியாகராஜன் மற்றும் காவியாவை போலீசார் கைது செய்தனர்.


Advertisement