தமிழகம் இந்தியா

தான் பெற்ற 17 வயது மகளை பாலியல் தொழிலில் ஈடுபடுத்திய தாய்! விசாரணையில் வெளிவந்த பகீர் தகவல்!

Summary:

mom forced daugetrer

கர்நாடக மாநிலம் பெங்களூருவை சேர்ந்த பெண் ஒருவர் ஆம்பூர் பகுதியை சேர்ந்த பிரேமா என்பவருடன் பழகியுள்ளார். இந்தநிலையில் அந்த பெண், தனது குடும்பத்தில் நிறைய கஷ்டங்கள் உள்ளதால் பிரேமாவிடம் தனது குடும்ப கஷ்டத்தை கூறி, தனது 17 வயது சிறுமிக்கு, வேலை கிடைக்க உதவி செய்துத் தருமாறு கேட்டுள்ளார்.

இதனையடுத்து அந்த பெண் தனது மகளை தமிழகத்திற்கு அழைத்து வந்து பிரேமாவிடம் அறிமுகம் செய்து வைத்துள்ளார். ஆனால் பிரேமா, அந்தச் சிறுமியை பாலியல் தொழிலில் ஈடுபடுத்தியதாக கூறப்படுகிறது. இதனையடுத்து சிறுமி காவல்துறைக்கு தொலைபேசி மூலம் புகார் கொடுத்துள்ளார். 

சிறுமி அளித்த புகாரின்பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து விசாரணை மேற்கொண்டனர். அப்போது சிறுமியின் தாயார் மற்றும் இருவரிடம் விசாரித்ததில் சிறுமியை பெற்ற தாயே பாலியல் தொழிலில் ஈடுபடுத்திய கொடுமை தெரியவந்தது. இதனையடுத்து இந்த கொடூர செயலில் ஈடுபட்ட மூவரையும் போலீசார் கைது செய்தனர். 


Advertisement