கொரோனாவால் அடுத்தடுத்து உயிரிழந்த 4 மகன்கள்.! பேரதிர்ச்சியில் தாயும் மரணம்.!

கொரோனாவால் அடுத்தடுத்து உயிரிழந்த 4 மகன்கள்.! பேரதிர்ச்சியில் தாயும் மரணம்.!


mom died for her 4 sons death

திருப்பூர் மாவட்டம், வெள்ளிரவெளி பகுதியை சேர்ந்தவர் பாப்பம்மாள், 70 வயது நிரம்பிய இவருக்கு தங்கராஜ், ராஜா, சவுந்தரராஜன், தெய்வராஜ் என நான்கு மகன்கள் இருந்தனர். அனைத்து மகன்களுக்கும் திருமணமாகி அவர்கள் தனித்தனியாக வசித்து வரும் நிலையில், அடிக்கடி வந்து தாயை சந்தித்து செல்வதை வழக்கமாக வைத்திருந்தனர்.

அவரது மருமகள்களும் பாப்பம்மாளை நன்கு கவனித்து வந்துள்ளனர். இந்தநிலையில், பாப்பம்மாளின் மூன்றாவது மகன் தெய்வராஜ் மற்றும் தெய்வராஜின் மனைவி சாந்தி ஆகிய இருவரும் சில நாட்களுக்கு முன், கொரோனாவுக்கு பலியாயினர். இதனையடுத்து அடுத்தடுத்த நாட்களில், தெய்வராஜின் சகோதரர்கள் மூவரும் தொற்றால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தனர்.

mom deathஆனால் மகன்கள் 4 பேரும் இறந்ததை, தாய் பாப்பம்மாளுக்கு உறவினர்கள் கூறாமல் இருந்து வந்தனர். இந்தநிலையில் மகன்கள் யாரும் திடீரென பார்க்க வராததால், அக்கம்பக்கத்தினரிடம் அடிக்கடி விசாரித்து வந்துள்ளார் பாப்பம்மாள். இதனையடுத்து மகன்கள் நால்வரும் உயிரிழந்தது குறித்து உறவினர்கள் தெரிவித்துள்ளனர். ஆனால் அன்று இரவு உறக்கத்திலேயே பாப்பம்மாள் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இச்சம்பவம் அப்பகுதியில் பேரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.