தமிழகம்

வேறொரு பெண்ணுடன் செல்போனில் அடிக்கடி பேசிய கணவர்.! 17 வயது மகளுடன் தாய் எடுத்த விபரீத முடிவு.!

Summary:

சென்னை பாடி கலைவாணர் நகர் பகுதியை சிறந்தவர்கள் அசோக் ராஜபாண்டி-ராஜலட்சுமி தம்பதி. இவர்களுக

சென்னை பாடி கலைவாணர் நகர் பகுதியை சிறந்தவர்கள் அசோக் ராஜபாண்டி-ராஜலட்சுமி தம்பதி. இவர்களுக்கு 17 வயதில் ஒரு மகளும், 11 வயதில் ஒரு மகனும் உள்ளனர். அசோக் ராஜபாண்டி அவர் வசிக்கும் பகுதியிலே சொந்தமாக ஓட்டல் நடத்தி வருகிறார்.  இந்தநிலையில், அசோக் ராஜபாண்டி மற்றும் அவரது மகன் சிவநேசன் ஆகிய இருவரும் நேற்று மதியம் ஓட்டலில் இருந்து வீட்டுக்கு வந்தனர். அப்போது தனது மனைவி ராஜலட்சுமி மற்றும் மகள் சிவதர்ஷினி இருவரும் வீட்டில் உள்ள 2 மின்விசிறிகளில் தனித்தனியாக தூக்கில் தொங்கியபடி கிடந்துள்ளனர். 

இதனைப்பார்த்து அதிர்ச்சியடைந்த அசோக் ராஜபாண்டி உடனடியாக மனைவி, மகள் இருவரையும் மீட்டு அருகில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளார். அவர்களை பரிசோதித்த மருத்துவர்கள் தாய்-மகள் இருவரும் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து தகவலறிந்து மருத்துவமனைக்கு விரைந்த போலீசார் இருவரின் உடல்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதுதொடர்பாக போலீசார் நடத்திய விசாரணையில், அசோக் ராஜபாண்டி வேறொரு பெண்ணுடன் அடிக்கடி செல்போனில் நீண்டநேரம் பேசி வந்ததாகவும், இதனால் கணவன்-மனைவி இடையே தகராறு ஏற்பட்டு இருவரும் ஒரே வீட்டில் வசித்து வந்தாலும் ஒருவருக்கு ஒருவர் பேச்சுவார்த்தை இல்லாமல் வசித்து வந்ததாக கூறப்படுகிறது. இதனகாரணமாக ராஜலட்சுமி, தனது மகள் சிவதர்ஷினியுடன் வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து இருக்கலாம் என சந்தேகிப்பதாக போலீசார் தெரிவித்தனர். இதுதொடர்பாக போலீசார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


Advertisement