கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்ததால் பச்சிளம் குழந்தையின் கையை முறித்த தாய்.!

கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்ததால் பச்சிளம் குழந்தையின் கையை முறித்த தாய்.!


mom attacked her child

சென்னை பழைய வண்ணாரப்பேட்டை கல்லறை சாலை பகுதியைச் சோ்ந்தவா் கபிலன். இவரின் மனைவி தமிழரசி. இந்த தம்பதிக்கு  2½ வயதில் பெண் குழந்தை உள்ளது. கருத்து வேறுபாடு காரணமாக கபிலனும், தமிழரசியும் பிரிந்து வாழ்கின்றனா். இந்நிலையில், சிவா என்பவருடன் தமிழரசிக்கு பழக்கம் ஏற்பட்டு அது நாளடைவில் கள்ளக்காதலாக மாறியது.

இருவரும் தமிழரசி வீட்டில் அவ்வப்போது உல்லாசமாக இருந்து வந்தனர். அந்த நேரத்தில் வீட்டில் குழந்தை அடிக்கடி அழுதுள்ளது. கள்ளக்காதலனுடன் உல்லாசத்துக்கு இடையூறாக இருந்ததால் பெற்ற குழந்தை என்றும் பாராமல் தமிழரசி அடிக்கடி குழந்தையை தாக்கியதாக கூறப்படுகிறது. கடந்த சில நாட்களுக்கு முன்பும் கள்ளக்காதலனுடன் உல்லாசமாக இருந்தபோது குழந்தை அழுததால் தமிழரசி குழந்தையை சரமாரியாக தாக்கினார்.

இதில் இதில், அக்குழந்தையின் வலது கையில் முறிவு ஏற்பட்டது. இதானையடுத்து குழந்தையை சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அழைத்துச்சென்றார். குழந்தையின் உடலில் காயங்கள் இருப்பதுடன், கையில் எலும்பு முறிவு ஏற்பட்டு இருப்பதால் சந்தேகம் அடைந்த மருத்துவர்கள், இதுபற்றி குழந்தை நல ஆர்வலர் குழுவுக்கு தகவல் தெரிவித்தனர். இதுதொடா்பாக தகவல் அறிந்த குழந்தைகள் நல அலுவலா் காருண்யா தேவி வண்ணாரப்பேட்டை மகளிா் காவல் நிலையத்தில் புகாா் அளித்தாா். இதுகுறித்து வழக்குப் பதிவு செய்த போலீஸாா் தமிழரசியை கைது செய்து சிறையில் அடைத்தனா்.