"நான் சாதிச்சு காட்டுறேன்" - நெப்போலியனின் மகன் தனுஷ் உறுதி.!
தண்டவாளத்தில் தவறி விழுந்த கைக்குழந்தை.! பதறியோடி காப்பாற்ற குதித்த தாய்.! நூலிழையில் உயிர் பிழைத்த அதிசயம்...!
காட்பாடி ரயில் நிலையத்தில் கைக்குழந்தை ஒன்று தண்டவாளத்தில் தவறி விழுந்துள்ளார். குழந்தையை காப்பாற்ற முயன்ற தாயும் தண்டவாளத்தின் மத்தியில் விழுந்ததால் தாயும், குழந்தையும் அதிருஷ்டவசமாக உயிா் பிழைத்தனா்.
வேலூர் மாவட்டம் காட்பாடி பள்ளிக்குப்பம் மேட்டுத்தெருவை சேர்ந்தவர் யுவராணி. இவர் 9 மாத ஆண் கைக்குழந்தையுடன் காட்பாடி ரயில் நிலையத்திற்கு வந்துள்ளார். அப்போது, நடைமேடையில் விளையாடிக்கொண்டிருந்த குழந்தை திடீரென தண்டவாளத்தில் தவறி விழுந்துள்ளது. அதனைப் பார்த்து பதறியடித்து ஓடிய யுவராணி தண்டவாளத்தில் குதித்து தனது குழந்தையை தூக்கிக்கொண்டு மேலே ஏற முயன்றுள்ளார்.
அப்போது அந்த வழியே வந்த எர்ணாகுளம் எக்ஸ்பிரஸ் ரயில் யுவராணி மீது மோதியது. இதில் தலையில் பலத்த காயத்துடன் யுவராணி கீழே விழுந்தார். கைக்குழந்தையும் தண்டவாளத்தில் விழுந்தது. உடனடியாக ரயில் நிறுத்தப்பட்டது. இருவரும் தண்டவாளத்தின் மத்தியில் விழுந்ததால் அதிருஷ்டவசமாக உயிா் பிழைத்தனா்.
இதனையடுத்து காட்பாடி ரயில்வே போலீசார் தண்டவாளத்தில் விழுந்து கிடந்த இருவரையும் மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ரயில் தண்டவாளத்தில் கைக் குழந்தை மற்றும் தாய் சிக்கி அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.