இளம் பெண்ணுடன் எம்.எல்.ஏ வுக்கு நடந்த திருமணம்! இளம் மனைவியுடன் சேர்ந்து எம்.எல்.ஏ வெளியிட்ட பரபரப்பு வீடியோ!

இளம் பெண்ணுடன் எம்.எல்.ஏ வுக்கு நடந்த திருமணம்! இளம் மனைவியுடன் சேர்ந்து எம்.எல்.ஏ வெளியிட்ட பரபரப்பு வீடியோ!


mla-prabu-marriage-photos-and-viral-video

இளம் பெண்ணை திருமணம் செய்துகொண்டநிலையில் இளம் பெண்ணின் தந்தை கோத்த புகாரை அடுத்து கள்ளக்குறிச்சி தொகுதி அதிமுக எம்எல்ஏ பிரபு என்ன நடந்தது என்பது குறித்து தனது மனைவியுடன் விளக்கமளித்துள்ளார்.

கள்ளக்குறிச்சி தொகுதி அதிமுக எம்எல்ஏ பிரபு நேற்று அவரது காதலியை திருமணம் செய்துகொண்ட நிலையில் அவர் அந்த பெண்ணை கடத்திச்சென்று திருமணம் செய்ததாகவும், அந்த பெண்ணிற்கும், அவரது குடும்பத்தினருக்கும் கொலை மிரட்டல் விடுத்ததாகவும் பரபரப்பு புகார் எழுந்தது.

mla prabu

மேலும் இது குறித்து அந்தப் பெண்ணின் தந்தை கூறியுள்ள தகவலில், எம்எல்ஏ பிரபு தமது குடும்பத்தினருடன் நட்பாக பழகி வந்ததாகவும், அடிக்கடி தங்கள் வீட்டிற்கு வந்த அவர் தனது மகளிடம் ஆசை வார்த்தைகளை கூறி அவரின் மனதை மாற்றி கடத்திச் சென்று திருமணம் செய்ததாகவும் வீடியோ ஒன்றை வெளியிட்டார்.

மேலும் பெண்ணின் தந்தை தற்கொலைக்கு முயற்சி செய்ததகவும் கூறப்படுகிறது. இதுஒருபுரம் இருக்க, நானும் சவுந்தர்யாவும் கடந்த சில மாதங்களாக காதலித்துவந்ததாகவும், ஆனால் சவுந்தர்யாவின் பெற்றோர் தங்கள் காதலை ஏற்றுக்கொள்ளவில்லை. மேலும் நாங்கள் திருமணம் செய்துகொள்ளவும் சம்மதிக்கவில்லை.

எனவே எனது பெற்றோரின் சம்மத்துடனுன், சவுந்தர்யாவின் விருப்பதுடனும்தான் நான் அவரை திருமணம் செய்துகொண்டேன். யாருக்கும் நான் கொலை மிரட்டல் விடுக்கவில்லை என தனது மனைவி சவுந்தர்யாவுடன் சேர்ந்து எம்எல்ஏ பிரபு வீடியோ ஒன்றை நேற்று வெளியிட்டார்.

இந்நிலையில் எம்.எல்.ஏ. பிரபுவால் கடத்தப்பட்ட தனது மகளை மீட்க கோரி சவுந்தர்யாவின் தந்தை சுவாமிநாதன் அவர்கள் தாக்கல் செய்த ஆட்கொணர்வு மனுவை ஏற்றுக்கொண்ட சென்னை உயர் நீதிமன்றம், இந்த மனுவை நாளை விசாரிப்பதாக தெரிவித்துள்ளது.