விஜய் டிவி ராசித்தா ரசிகரா நீங்க!!! குட்டி உடையில் கியூடான புகைப்படம் உங்களுக்காக!
உங்களது ஆதரவு தேவை.! கமலுக்கு நன்றி தெரிவித்த தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின்.!

தமிழகத்தில் 234 சட்டமன்ற தொகுதிகளுக்கும் ஒரே நேரத்தில் வாக்கு எண்ணிக்கை தொடங்கியது. தமிழகத்தில் இதுவரை எண்ணப்பட்ட முடிவுகளின்படி ஆரம்பத்தில் இருந்தே திமுக கூட்டணி அதிக இடங்களில் முன்னிலை வகித்து வந்த நிலையில், திமுக 158 இடங்களில் முன்னிலையிலும், அதிமுக 76 தொகுதிகளில் முன்னிலையில் இருக்கிறது.
இந்தநிலையில், திமுக ஆட்சி அமைப்பது உறுதியாகியுள்ள நிலையில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு பிரதமர் மோடி உட்பட பல்வேறு அரசியல் கட்சி தலைவர்களும், நடிகர் ரஜினிகாந்த் தங்கள் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர். இந்நிலையில், மு.க.ஸ்டாலினுக்கு கமல் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில், பெருவெற்றி பெற்றுள்ள மு.க.ஸ்டாலினுக்கு மனப்பூர்வமான பாராட்டுக்கள். நெருக்கடியான காலகட்டத்தில் தமிழகத்தின் முதல்வராக பொறுப்பேற்கிறீர்கள். சிறப்பாக செயல்பட்டு தமிழகத்தை வளர்ச்சிப்பாதையில் அழைத்துசெல்ல என் வாழ்த்துக்கள். என தெரிவித்துள்ளார்.
அன்பு நண்பரும் மக்கள் நீதி மய்யத்தின் தலைவருமான @ikamalhaasan அவர்களின் வாழ்த்துகளுக்கு நெஞ்சார்ந்த நன்றி!
— M.K.Stalin (@mkstalin) May 2, 2021
பேரிடரிலிருந்து மக்களைக் காக்க வேண்டிய பெரும் பணியில் தங்களைப் போன்றவர்களின் ஆதரவும் ஆலோசனைகளும் புதிய அரசு மேற்கொள்ளும் மக்கள் நலப் பணிக்குத் துணையாகட்டும். https://t.co/Wl7rC9Oxjn
கமலின் பதிவிற்கு பதிலளித்த மு.க.ஸ்டாலின், அன்பு நண்பரும் மக்கள் நீதி மய்யத்தின் தலைவருமான கமல்ஹாசன் அவர்களின் வாழ்த்துகளுக்கு நெஞ்சார்ந்த நன்றி! பேரிடரிலிருந்து மக்களைக் காக்க வேண்டிய பெரும் பணியில் தங்களைப் போன்றவர்களின் ஆதரவும் ஆலோசனைகளும் புதிய அரசு மேற்கொள்ளும் மக்கள் நலப் பணிக்குத் துணையாகட்டும். என தெரிவித்துள்ளார்.