கொரோனா பரவலை கட்டுப்படுத்த தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கொடுத்த பக்கா ஐடியா.! வைரலாகும் வீடியோ.!

கொரோனா பரவலை கட்டுப்படுத்த தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கொடுத்த பக்கா ஐடியா.! வைரலாகும் வீடியோ.!


mk Stalin talk about corona

தற்போது நாடு முழுவதும் கொரோனா பரவல் இரண்டாவது அலையாக கோரத்தாண்டவமாடி வருகிறது. இந்த நிலையில் தமிழகத்திலும் கொரோனா அதிதீவிரமாக பரவி நாள்தோறும் 30 ஆயிரத்துக்கும் அதிகமானோர் கொரோனாவால் பாதிக்கப்படும், நூற்றுக்கும் அதிகமான மக்கள் கொரோனாவால் உயிரிழந்தும்வருகின்றனர். இந்நிலையில் கொரோனாவை கட்டுப்படுத்த தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டுவருகிறது. 

இந்தநிலையில், முகக்கவசம் அணிவது, கிருமிநாசினி பயன்படுத்துவது, தடுப்பூசி போட்டுக்கொள்வது ஆகிய மூன்றின் மூலமாக தொற்றில் இருந்து நம்மையும், நம் குடும்பத்தையும் காப்பாற்றிக்கொள்ளலாம் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார்.


இதுதொடர்பாக, தமிழக மக்களுக்கு கொரோனா விழிப்புணர்வு குறித்த வீடியோ ஒன்றை முதல்வர் மு.க.ஸ்டாலின், தனது டுவிட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அதில், இது கொரோனா பெருந்தொற்று காலமாக இருப்பதால் அனைவரும் மிகுந்த பாதுகாப்புடனும், எச்சரிக்கையுடனும் இருக்க வேண்டும். முடிந்தளவு வீட்டிற்குள்ளேயே இருங்கள். தவிர்க்க முடியாத காரணங்களால் வெளியில் சென்றாலும் தனி மனித இடைவெளியை கடைப்பிடியுங்கள். தொற்றில் இருந்து பாதுகாத்திட மிக முக்கியமானது முகக்கவசம். இதனை அனைவரும் அணிய வேண்டும். மூக்கு, வாய்யை மூடியிருக்கும் வகையில் முழுமையாக போட வேண்டும்.

மக்கள் அதிகம் கூடும் இடங்களுக்கு செல்லும்போது இரண்டு முகக்கவசங்கள் அணிய வேண்டும் என மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர். கிருமிநாசினியால் கைகளை அடிக்கடி சுத்தப்படுத்துங்கள். இவை எல்லாவற்றையும் விட முக்கியமானது தடுப்பூசி போட்டுக்கொள்வது. இதுவரை தடுப்பூசி போடாதவர்கள் போட்டுக்கொள்ளுங்கள். சிலருக்கு காய்ச்சல், உடல்வலி வந்தாலும் ஒரேநாளில் சரியாகிவிடும். முக கவசம் அணிவது, கிருமிநாசினி பயன்படுத்துவது, தடுப்பூசி போட்டுக்கொள்வது போன்றவைகளால் கொரோனா தொற்றிடம் இருந்து நம்மையும், நம் குடும்பத்தையும் காப்பாற்றி கொரோனா இல்லாத தமிழகம் அமைப்போம். இவ்வாறு அவர் பேசியுள்ளார்.