மு.க.ஸ்டாலினை விட உதயநிதி சொத்து மதிப்பு அதிகமாம்.! எவ்வளவு தெரியுமா.? வேட்புமனுவில் வெளியான தகவல்.!

மு.க.ஸ்டாலினை விட உதயநிதி சொத்து மதிப்பு அதிகமாம்.! எவ்வளவு தெரியுமா.? வேட்புமனுவில் வெளியான தகவல்.!



mk-stalin-and-udhaynithi-property-value

தமிழக சட்டப்பேரவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு வரும் ஏப்ரல் 6-ம் தேதி நடைபெற உள்ளது. தேர்தலுக்கான வேட்பு மனுதாக்கல் கடந்த 12-ம் தேதி முதல் தொடங்கியது. இந்தநிலையில் தற்போதைய முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி, திமுக முதலமைச்சர் வேட்பாளருமான மு.க ஸ்டாலின் ஆகியோர் நேற்று வேட்புமனு தாக்கல் செய்தனர்.

அந்த மனுவில் மு.க.ஸ்டாலின் குறிப்பிட்டுள்ள சொத்து மதிப்பு குறித்த தகவல் தற்போது வெளியாகி உள்ளது. அதே போல் உதயநிதி சேப்பாக்கம் திருவல்லிக்கேணி தொகுதியில் போட்டியிட மனு தாக்கல் செய்துள்ளார். இந்நிலையில் அதன் மூலம் உதயநிதியின் சொத்து மதிப்பு தெரியவந்துள்ளது. 

MK Stalin

மு.க ஸ்டாலினின் சொத்து மதிப்பு 4.94 கோடியாகவும், அசையா சொத்து மதிப்பு 1.17 கோடியாகவும் உள்ளது.அவரது மனைவி துர்கா ஸ்டாலின் பெயரில் 53 லட்சம் மதிப்பில் அசையும் அசையா சொத்துகள் உள்ளதாகவும் ஸ்டாலின் தனது வேட்புமனுவில்  குறிப்பிட்டுள்ளார்.

அதேபோல் உதயநிதி ஸ்டாலினின் அசையும் சொத்து ரூ.22.28 கோடி எனவும், அசையா சொத்து ரூ.6.54 கோடி எனவும் கூறப்பட்டுள்ளது. மொத்த சொத்து ரூ.28.82 கோடி என்றும் ரூ.1.35 லட்சம் கடன் உள்ளதாகவும் உதயநிதி ஸ்டாலின் தனது வேட்புமனுவில்  குறிப்பிட்டுள்ளார்.