காணாமல் போன ஐந்து வயது சிறுவன் கிணற்றில் சடலமாக மீட்பு; பெரம்பலூரில் சோகம்...!



Missing five-year-old boy found dead in well; Tragedy in Perambalur...

தாத்தா வீட்டிற்கு சென்ற சிறுவன், கிணற்றில் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

பெரம்பலூர் மாவட்டம் வடக்கு மாதவி ஏரிக்கரை தெருவில் வசிப்பவர் கோவிந்தராஜ். இவர் சென்னையில் இருக்கும் தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார். இவரது மனைவி சத்தியா. இவர்களுக்கு  ஐந்து வயதில் சுதர்சன் என்ற மகன் உள்ளார்.

என் நிலையில் சத்தியா தனது மகனுடன் அனுகூர் குடிகாடு காட்டு கொட்டகையில் இருக்கும் அவரின் தந்தை வீட்டிற்கு சென்றுள்ளார். அங்கு நேற்று காலை வீட்டிற்கு வெளியே விளையாடிக் கொண்டிருந்த சுதர்சன் திடீரென காணாமல் போனான்.

இதனால் சிறுவனின் தாய் மற்றும் உறவினர்கள், அந்தப் பகுதியில் பல இடங்களில் சிறுவனை தேடினர். ஆனால் சுதர்சன் கிடைக்கவில்லை. இந்நிலையில் அந்த பகுதியில் இருந்த கிணறு அருகே சுதர்சனின் செருப்பு மற்றும் விளையாட வைத்திருந்த பொம்மை கிடந்துள்ளது.

இதை பார்த்த அங்கிருந்தவர்கள் தீயணைப்பு துறையினருக்கு தகவல் அளித்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்பு துறையினர் கிணற்றுக்குள் இறங்கி சிறுவனை தேடினர். நீண்ட நேர போராட்டத்திற்கு பிறகு சிறுவன் பிணமாக மீட்கப்பட்டான்.

இதை தொடர்ந்து சிறுவனின் உடல் உடற்கூராய்விற்காக பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இந்த சம்பவம் குறித்து, மங்களமேடு காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து, விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.