மறுபடியும் தெர்மகோலுக்கே போகணுமா? - செல்லூர் ராஜுவிடம் அமைச்சர் காட்டம்.!
![Minister Sivasankar Vs Sellur Raju on TN Assembly 10 Jan 2025](https://cdn.tamilspark.com/large/large_sellur-raju-ss-sivasankar-75940.png)
தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டத்தொடர் தொடங்கி நடைபெறும் நிலையில், அதிமுக அண்ணா பல்கலைக்கழக மாணவி விவகாரத்தை கையில் எடுத்து, அரசுக்கு எதிராக கேள்விகளை முன்வைத்து வருகிறது. திமுக தலைமையிலான தமிழ்நாடு அரசுத்தரப்பு அதற்கு பதில்களை வழங்கி இருக்கிறது. குற்றவாளியை தப்பிக்க விடமாட்டோம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
முகம் சிவந்த அமைச்சர்
இந்நிலையில், சட்டப்பேரவையில் நடைபெற்ற விவாதகூட்டத்தின்போது, பழைய, பழுதான பேருந்துகள் தொடர்பாக சில கேள்விகள் முன்வைக்கப்பட்டது. இதற்கு பதிலளித்த அமைச்சர் எஸ்.எஸ் சிவசங்கர், திடீரென முகம் சிவந்தார். இதுதொடர்பாக அவர் பேசுகையில், "பழைய புகைப்படத்தை இப்போது பதிவிட்டு சில ஐடி விங் ஆட்கள் வைரலாக்கி வருகிறார்கள். நாங்கள் அதனை உண்மை சரிபார்ப்பகம் கொண்டு சோதனை செய்துள்ளோம்.
இதையும் படிங்க: "எந்த குற்றவாளியையும் தப்பிக்க விடமாட்டோம்" - உதயநிதி ஸ்டாலின் உறுதி.!
"செல்லூர் ராஜு அண்ணே.. மறுபடியும் தெர்மாகோலுக்கு போக வேண்டியது வந்துரும்"
— Sun News (@sunnewstamil) January 10, 2025
- சட்டப்பேரவையில் அமைச்சர் சிவசங்கர் பேச்சு#SunNews | #TNAssembly | #SellurRaju pic.twitter.com/nGkYp7hHY0
தெர்மக்கோலுக்கு செல்லவா?
அண்ணன் செல்லூர் ராஜு பேசாமல் இருங்கள், எழுந்திருக்கும்போது பேசுங்கள், உட்கார்ந்து பேசாதீர்கள். அண்ணன் செல்லூர் ராஜு மீண்டும் தானாக பேருந்துக்கு செல்கிறார். நான் மறுபடியும் தெர்மக்கோலுக்கு செல்ல வேண்டிய நிலை ஏற்படும்" என பேசினார்.
இதையும் படிங்க: #Breaking: பொங்கல் பரிசு ரூ.1000 ரத்து எதனால்? அமைச்சர் தங்கம் தென்னரசு பரபரப்பு பதில்.!