இனி மின்தடை இருக்காது..! அடித்துச்சொல்லும் அமைச்சர் செந்தில் பாலாஜி.!

இனி மின்தடை இருக்காது..! அடித்துச்சொல்லும் அமைச்சர் செந்தில் பாலாஜி.!


minister senthilbalaji talk about power cut

தமிழகத்தில் மின்தடை அதிகம் ஏற்பட்டு வருகிறது. இதுகுறித்து மின்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி சமீபத்தில் பேசுகையில், அதிமுக ஆட்சியில் மின் பராமரிப்பு பணிகள் நடைபெறாமல் இருந்த நிலையில் மின்கம்பிகளில் ஓடும் அணில்களால் மின்தடை ஏற்படுகிறது என்று தெரிவித்திருந்தார். இது விவாத பொருளாக மாறியது. 

இந்தநிலையில், தமிழ்நாட்டில் இனி மின்தடை இருக்காது என தமிழக மின்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி தெரிவித்திருக்கிறார். சென்னை அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் செந்தில் பாலாஜி, தமிழகத்தில் இனி மின்தடை உறுதியாக இருக்காது. மாதாந்திர பராமரிப்பு பணிகள் மட்டுமே நடைபெறும். மின்தடை தொடர்பாக சமூக வலைத்தளங்களில் பொத்தாம்பொதுவாக பதிவிட கூடாது.

            Senthil balaji

எந்த புதிய மின் திட்டங்களும் அதிமுக ஆட்சியில் கொண்டு வரப்படவில்லை. மின் இணைப்பு எண்ணுடன் சமூக வலைத்தளங்களில் பதிவிட்டால் உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும். கூடுதல் மின் கட்டணம் தொடர்பாக நுகர்வோர் சேவை மையத்திற்கு வரும் புகார்கள் ஆய்வு செய்யப்படும். என தெரிவித்துள்ளார்.