தமிழகம்

வகுப்பில் மயக்கி விழுந்த மாணவி..! இடுப்புக்கு கீழ் செயல்படாமல் போன உறுப்புக்கள்..! கதறிய மாணவியை நெகிழ வைத்த அமைச்சர் செங்கோட்டையன்..!

Summary:

Minister Sengotaiyan helps 10th std student

காசநோய் காரணமாக இடுப்புக்கு கீழ் செயலிழந்த 10 ஆம் வகுப்பு மாணவி ஒருவருக்கு வர இருக்கும் 10 ஆம் வகுப்பு பொது தேர்வு எழுத அனுமதிவழங்கி, அந்த மாணவி தேர்வு எழுத அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்க உத்தரவிட்டுள்ளார் தமிழக கல்வித்துறை அமைச்சர் திரு. செங்கோட்டையன் அவர்கள்.

சென்னையில் உள்ள தனியார் பள்ளி ஒன்றில் 10 ஆம் வகுப்பு படித்துவரும் பிரியதர்ஷினி என்ற மாணவி நாள்பட்ட காசநோயினால் அவதிப்படுவந்துள்ளார். இந்நிலையில் கடந்த பிப்ரவரி மாதம் அறிவியல் பாடத்திற்கான செய்முறை தேர்வு பள்ளியில் நடந்துகொண்டிருந்தபோது பிரியதர்ஷினி வகுப்பறையிலையே மயங்கி விழுந்துள்ளார்.

இதனை அடுத்து மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை நடைபெற்றுவரும் நிலையில் மாணவிக்கு இடுப்புக்கு கீழ் உள்ள பாகங்கள் செயலிழந்துள்ளது. இதனால் மாணவி வர இருக்கும் 10 ஆம் வகுப்பு பொது தேர்வை எழுதவேண்டாம் என பள்ளியின் முதல்வர் மறுப்பு தெரிவித்துள்ளார்.

தான் எப்படியும் தேர்வு எழுத வேண்டும் எனவும், தனக்கு உதவி செய்யும்படியும் அமைச்சர் செங்கோட்டையனுக்கு மாணவி கோரிக்கை வைத்திருந்தார். மாணவியின் கோரிக்கையை ஏற்ற அமைச்சர் அவர் தேர்வு எழுத அனைத்து நடவ்டிக்கைகளையும் எடுக்கும்படி அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார்.

இதனால் மகிழ்ச்சி அடைந்த அந்த மாணவி, நீங்கள் செய்த இந்த உதவியை என் வாழ்நாளில் மறக்க மாட்டேன் என நன்றி கூறி வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.


Advertisement