கிணற்றில் குதித்து ஆனந்த குளியல் போட்ட அமைச்சர் மா.சுப்பிரமணியன்.! வீடியோவை பகிர்ந்து மகிழ்ச்சி.!

கிணற்றில் குதித்து ஆனந்த குளியல் போட்ட அமைச்சர் மா.சுப்பிரமணியன்.! வீடியோவை பகிர்ந்து மகிழ்ச்சி.!


Minister maa.Subramanian bath in village well video viral

மக்கள் நல்வாழ்வு மற்றும் மருத்துவத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் ஈரோடு சென்ற நிலையில் அங்கு தோட்டத்து கிணற்றில் குளிக்கும் வீடியோவை சமூக ஊடகத்தில் பகிர்ந்த நிலையில் அது வைரலாகி வருகிறது.

மக்கள் நல்வாழ்வு மற்றும் மருத்துவத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் நடைப்பயிற்சி, மாரதான் ஓட்டம் ஆகியவற்றில் ஆர்வம்மிக்கவர். மேலும் அவர் பொதுநிகழ்ச்சிகளில் கலந்துகொள்ள வெளியூர் செல்லும்போதெல்லாம் அங்கு நடைப்பயிற்சி மேற்கொண்டு அந்த வீடியோக்களை இணையத்தில் பகிர்ந்து விழிப்புணர்வு ஏற்படுத்துவார்.

 இந்த நிலையில் ஈரோடு சென்ற அமைச்சர் மா.சுப்பிரமணியன் அங்கு தோட்டத்தில் உள்ள கிணறு ஒன்றில் குதித்து ஆனந்தகுளியல் போட்டுள்ளார். அந்த வீடியோவை அவர் சமூக வலைத்தளப்பக்கத்தில், தினந்தோறும் குளியலறையில் 2 குடம் தண்ணீரில் குளிக்கும் வழக்கத்திலிருந்து சற்று மாறுபட்டு இன்று காலை மகிழ்ச்சிகரமான கிராம குளியல் எனப் பதிவிட்டுள்ளார். அந்த வீடியோ வைரலாகி வருகிறது.