Alert: அதிதீவிர புயலாக மாறி அடித்து நொறுக்கப்போகும் மிக்ஜாம்.! மக்களுக்கு எச்சரிக்கை விடுத்த பேரிடர் மேலாண்மை வாரியம்.!!

Alert: அதிதீவிர புயலாக மாறி அடித்து நொறுக்கப்போகும் மிக்ஜாம்.! மக்களுக்கு எச்சரிக்கை விடுத்த பேரிடர் மேலாண்மை வாரியம்.!!



Mikjam cyclone alert chennai

 

மிக்ஜாம் புயல் காரணமாக தலைநகர் சென்னை, திருவள்ளூர் உட்பட பல மாவட்டங்களில் புயல் காற்றுடன் தற்போது பலத்த மழை பெய்து வருகிறது. இதனால் பொதுமக்கள் வீட்டிற்குள் முடங்கியுள்ள நிலையில், சென்னையில் வசித்து வரும் மக்கள் பால், காய்கறி உட்பட அத்தியாவசிய பொருட்களை கூட வாங்க இயலாமல் தவித்து வருகின்றனர். 

தொடர்ந்து சென்னை சென்ட்ரலில் இருந்து இன்று புறப்படும் ஆறு ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதாகவும், அதன்படி சென்னை - மைசூர் சதாப்தி, சென்னை - பெங்களூர் டபுல் டக்கர் ரயில், சென்னை - பெங்களூர் பிருந்தாவன் ரயில், சென்னை - கோவை விரைவு ரயில், சென்னை - கோவை சதாப்தி மற்றும் சென்னை - திருப்பதி சப்தகிரி விரைவு ரயில் ஆகியவை ரத்து செய்யப்பட்டுள்ளது.  

Latest news

இதற்கு முன்பதிவு செய்திருந்த பயணிகளின் கட்டணமானது திருப்பி வழங்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் சென்னையில் உள்ள மக்களுக்கு குறுஞ்செய்தி வாயிலாக மாநில தேசிய பேரிடர் மேலாண்மை வாரியம் எச்சரிக்கையும் விடுத்துள்ளது.

அத்துடன் இன்று மாலை 05:30 மணியளவில் மிக்ஜாம் புயல் அதிதீவிர புயலாக மாறும் எனவும், இந்த புயல் ஆந்திர பிரதேச மாநிலத்தில் உள்ள நெல்லூர் - மசூலிப்பட்டணம் இடையே கரையை கடக்க வாய்ப்பு இருப்பதாகவும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.