தமிழகம் இந்தியா

காதலை ஏற்க மறுத்ததால் இளம்பெண்ணின் கழுத்தை அறுத்து கொலை செய்த கொடூரன்!

Summary:

Men murdered 21 years old girl for one side love

பெண்களுக்கு எதிரான பாலியல் தொல்லைகள் அதிகரித்துவரும் அதே வேளையில் ஒருதலைகாதலால் பெண்களுக்கு எதிராக நடைபெறும் குற்றங்களும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. சென்னை நுங்கம்பாக்கத்தில் பட்ட பகலில் சுவாதிக்கு ஏற்பட்ட கொடுமை இன்னும் மறையாத நிலையில் தற்போது மீண்டும் ஒரு கொடூர சம்பவம் நடைபெற்றுள்ளது.

தன்னை காதலிக்க மறுத்த இளம் பெண் ஒருவரை வாலிபர் கத்தியால் கழுத்தில் குத்தி கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. வள்ளியூர் பஸ் நிலையம் எதிரே உள்ள ஜவுளிக்கடையில் தக்கலையை சேர்ந்த மெர்சி(21) என்ற இளம் பெண் விடுதியில் தங்கியிருந்து வேலை செய்து வந்துள்ளார்.

இந்நிலையில் திருக்குறுங்குடி மகிழடியை சேர்ந்த சண்முகம் மகன் ரவி(25) என்பவர் மெர்சியை ஒருதலையாக காதலித்துவந்துள்ளார். அவரது காதலை ஏற்க மறுத்துள்ளார் மெர்சி. இந்நிலையில் இன்று மாலை பஸ் நிலையம் எதிரே வந்த மெர்சியிடம் ரவி காதலிக்க வற்புறுத்தியுள்ளார்.

ஆனால் ரவியின் காதலை ஏற்க மறுத்துள்ளார் மெர்சி. இதனால் ஆத்திரம் அடைந்த ரவி தான் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து மெர்சி இன்  கழுத்தில் ஓங்கி குத்தியுள்ளான். இதில் ரத்தம் அதிக அளவில் வெளியேறிய நிலையில் மெர்சி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.தகவலறிந்த போலீசார் விரைந்து வந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

 


Advertisement