15 வயது சிறுமிக்கு காதல் வலை.. திருமணம் செய்து போலி குடித்தனம் நடத்தி இறுதியில் பயங்கரம்.!

15 வயது சிறுமிக்கு காதல் வலை.. திருமணம் செய்து போலி குடித்தனம் நடத்தி இறுதியில் பயங்கரம்.!


men-cheated-15-years-girl-after-marriage

15 வயது சிறுமியை காதலிப்பதாக ஆசை வார்த்தை கூறி, திருமணம் செய்து கர்ப்பமாக்கி ஏமாற்றிய வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

சென்னையில் உள்ள அண்ணா நகர் பகுதியில் 15 வயது சிறுமி ஒருவர் தனது குடும்பத்துடன் வசித்து வந்துள்ளார். இவர் அதே பகுதியை சேர்ந்த கவியரசன் என்பவரை காதலித்து வந்த நிலையில், கடந்த ஆண்டு டிசம்பர் 12ஆம் தேதி கவியரசன் சிறுமியிடம் ஆசை வார்த்தை கூறி திருமணம் செய்துள்ளார்.

மேலும், சிறுமியுடன் குடும்பம் நடத்துவதற்காக தனியாக வீடு ஒன்றினை எடுத்த நிலையில், கவியரசன் சரியாக வேலைக்கு செல்லாமல் இருந்துள்ளார். இதற்கிடையில் சிறுமி கர்ப்பமானதால், கவியரசனை வேலைக்கு செல்லுமாறு அவர் கூறியுள்ளார். இதனால் இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டு அடிக்கடி தகராறு நடந்துள்ளது.

chennai

இதில் ஆத்திரமடைந்த கவியரசன் சிறுமியை அடித்து துன்புறுத்திய நிலையில், கவியரசனை விட்டுப் பிரிந்த சிறுமி, தனது தாய் வீட்டிற்கு மீண்டும் சென்றுள்ளார். அத்துடன் சிறுமியின் குடும்பத்தினர் மே 1ஆம் தேதி குழந்தைகள் நல அலுவலகத்தை தொடர்பு கொண்டு இது குறித்து தகவல் தெரிவித்துள்ளனர்.

பின் சிறுமியின் வீட்டுக்கு சென்ற குழந்தைகள் நல அலுவலக அதிகாரிகள் சிறுமி மற்றும் அவரது குடும்பத்தினரிடம் விசாரணை நடத்தியுள்ளனர். விசாரணையில், கவியரசன் சிறுமியை திருமணம் செய்து கொடுமைப்படுத்தியது தெரியவந்ததையடுத்து, காவல்துறையினர் போக்சோ மற்றும் குழந்தை திருமண தடை சட்டம் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் கவியரசனின் மீது வழக்குப்பதிந்து கைது செய்து சிறையில் அடைத்தனர்.