"நான் சாதிச்சு காட்டுறேன்" - நெப்போலியனின் மகன் தனுஷ் உறுதி.!
மனைவி பிரிந்து சென்றதால் நடுரோட்டில் தீக்குளித்த கணவர்... மது அருந்தியதால் ஏற்பட்ட பரிதாபம்..!
குடும்பத்தகராறில் மனைவி பிரிந்து சென்றதால், மனமுடைந்த கணவர் நடுரோட்டில் தீக்குளித்த பரிதாபம் நிகழ்ந்துள்ளது.
ஈரோடு மாவட்டத்தில் உள்ள கோபிசெட்டிபாளையம் அடுத்த கணபதிபாளையத்தில் வசித்து வருபவர் செந்தில்குமார். இவர் போர்வெல் ஓட்டுனராக பணியாற்றி வருகிறார்.
இந்த நிலையில் அடிக்கடி வீட்டிற்கு மது அருந்திவிட்டு வந்து செந்தில்குமார் தகராறு செய்துள்ளார். இதனால் ஏற்பட்ட தகராறில் வாக்குவாதம் முற்றியதால் கோபமடைந்த மனைவி இந்திராணி தனது பிள்ளைகளுடன் தாய் வீட்டிற்கு சென்றுள்ளார்.மனமுடைந்த செந்தில்குமார் தனது மனைவியும், பிள்ளைகளும் தன்னைவிட்டு சென்று விட்டனரே என எண்ணி நேற்று மாலை தன் வீட்டிற்கு அருகாமையில் மண்ணெண்ணெய் ஊற்றி தீ வைத்துக் கொண்டார்.
இதில் 80 சதவீத உடலில் தீப்பற்றிய நிலையில், அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சையளித்தும், சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.