நாயை பிடிக்க முயன்று உயிரைவிட்ட இளைஞர்... அரசு பேருந்தின் சக்கரத்தில் சிக்கி பலி..! நெஞ்சை உலுக்கும் சோகம்..!

நாயை பிடிக்க முயன்று உயிரைவிட்ட இளைஞர்... அரசு பேருந்தின் சக்கரத்தில் சிக்கி பலி..! நெஞ்சை உலுக்கும் சோகம்..!


men-accident-by-government-bus-in-thenkasi

நாயை பிடிக்க சென்ற வாலிபர் அரசு பேருந்து சக்கரத்தில் சிக்கி பலியான சோகம் நிகழ்ந்துள்ளது.

தென்காசி மாவட்டத்தில் உள்ள மத்தளம்பாறை பகுதியில் வசித்து வருபவர் செல்வவிநாயகம். இவரது மகன் விக்னேஷ் பாண்டியன்.

இவரும், இவரது நண்பர் பாவூர்சத்திரம் குருசாமிபுரத்தை சேர்ந்த சுரேஷ் என்பவரும் விக்னேஷின் உறவினர் தோட்டத்திற்கு நாய் ஒன்றை கொண்டு சென்று விடுவதற்காக அழைத்து சென்றுள்ளனர்.

அப்போது நேற்று இரவு 8 மணியளவில் புல்லுக்காட்டுவலசை வழியாக ராமச்சந்திரபட்டணம் விலக்கு அருகே சென்று கொண்டிருந்த நிலையில், கையில் வைத்திருந்த நாயானது கீழே குதித்து ஓடியுள்ளது.thenkasiஇதனை கண்ட விக்னேஷ் உடனடியாக கீழே இறங்கி நாயை பிடிக்க முயற்சித்த போது தவறி சாலையில் விழுந்த நிலையில், நெல்லையில் இருந்து தென்காசி நோக்கி சென்று கொண்டிருந்த அரசு பேருந்து விக்னேஷ் பாண்டியன் மீது ஏறி இறங்கியுள்ளது.

இந்த விபத்தில் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக விக்னேஷ் துடிதுடித்து உயிரிழந்துள்ளார். இதுகுறித்து தகவலறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து விக்னேஷ் உடலை மீட்டு உடற்கூறு ஆய்வுக்காக தென்காசி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை செய்து வருகின்றனர்.