அந்தமானில் கச்சேரி.. இன்ப சுற்றுலா சென்ற அய்யனார் துணை நடிகர்கள்.. வைரலாகும் வீடியோ.!
முக்கிய புள்ளியை தட்டி தூக்கிய கமல்ஹாசன்.! அவருக்கு கமல் வழங்கிய முக்கிய பதவி.! அதிர்ச்சியில் பிற கட்சிகள்.!
தமிழகத்தில் விரைவில் சட்டமன்ற தேர்தல் நடைபெறவுள்ளநிலையில் பல்வேறு அரசியல் கட்சிகளும் தீவிரமாக பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றன. இதனால் தமிழகத்தில் அரசியல் களம் சூடுபிடிக்க துவங்கியுள்ளது. தமிழகத்தில் அதிமுக, அமமுக, திமுக, மக்கள் நீதி மய்யம், நாம் தமிழர் எனப் பல முனை போட்டி நிலவுகிறது.
இதனையடுத்து அனைத்து அரசியல் கட்சித் தலைவர்களும் தங்கள் தேர்தல் பிரச்சாரத்தை தீவிரப்படுத்தி வருகின்றனர். மக்கள் நீதி மய்யம் கமல் ஹாசனும் தீவிர தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார். இந்நிலையில், சில கட்சிகளின் முக்கிய நிர்வாகிகள் வெவ்வேறு காட்சிகளில் இணைந்துவருகின்றனர்.
அந்தவகையில், சமீபத்தில் திருப்பூர் மாவட்ட மதிமுக செயலாளர் சிவபாலன் அக்கட்சியிலிருந்து விலகி மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமல்ஹாசன் முன்னிலையில் தன்னை மக்கள் நீதி மய்யத்தில் இணைத்துக்கொண்டார். அதன் பிறகு சிவபாலனுக்கு பரப்புரையாளர் என்கின்ற பதவி வழங்கப்பட்டது. இந்நிலையில், சிவபாலன் 20க்கும் மேற்பட்டோரை கமல்ஹாசன் முன்னிலையில் மக்கள் நீதி மய்யத்தில் இணைத்தார்.