"நான் சாதிச்சு காட்டுறேன்" - நெப்போலியனின் மகன் தனுஷ் உறுதி.!
தொடரும்... சிறுவர்களை போதைக்கு அடிமையாக்கும் வழக்கம்... 32 வயது இளைஞர் கைது.!
மயிலாடுதுறை அருகே சிறுவனுக்கு மது ஊற்றி கொடுத்த வழக்கில் 32 வயது இளைஞர் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் தமிழகத்தில் பெற்றோர்களிடையே அச்சத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தி இருக்கிறது.
மயிலாடுதுறை சித்தர் காடு பகுதியைச் சார்ந்த ஒன்பது வயது சிறுவன் ஒருவனுக்கு 32 வயதான அறிவழகன் என்ற இளைஞர் மது ஊற்றிக் கொடுத்து குடிக்க சொன்னதாகவும் அந்த மதுவை குடித்து தன் மகன் மயக்கம் அடைந்த நிலையில் இருப்பதாகவும் தந்தை ஒருவர் மயிலாடுதுறை காவல் நிலையத்தில் புகாரஅளித்தார்.
அவரது புகாரை பெற்றுக் கொண்ட காவல் துறையினர் சிறுவனை உடனடியாக மயிலாடுதுறை பெரியார் மருத்துவமனையில் அனுமதித்தனர் . அங்கு சிறுவனுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது . மேலும் சிறுவனுக்கு மது ஊற்றி கொடுத்துவிட்டு தலைமறைவாக இருந்த அறிவழகன் என்ற இளைஞரை காவல்துறை கைது செய்திருக்கிறது .
மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த சிறுவன் தீவிர சிகிச்சையினால் நலமுடன் இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர் . மேலும் பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை எப்போதும் கண்காணிப்பிலேயே வைத்திருக்க வேண்டும் இல்லை என்றால் இது போன்ற விபரீத சம்பவங்கள் நடைபெறும் என காவல்துறையை எச்சரித்துள்ளது.