அய்யோ... சொன்ன மாதிரியே செஞ்சுடாங்களே! 10 வருஷ காதல்! திடீரென காதலனுக்கு நேர்ந்த பயங்கரம்!
காதல் தொடர்பில் குடும்பங்களின் எதிர்ப்பு பல்வேறு சிக்கல்களை ஏற்படுத்துகின்றன. அதற்கொரு உதாரணமாக, மயிலாடுதுறையில் நடந்த கொலைச் சம்பவம் தற்போது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
காதலால் ஏற்பட்ட குடும்ப தகராறு
அடியமங்கலம் கிராமத்தைச் சேர்ந்த வைரமுத்து (28) மற்றும் மாலினி (26) கடந்த 10 ஆண்டுகளாக காதலில் இருந்தனர். ஒரே சமூகத்தைச் சேர்ந்தவர்களாக இருந்தாலும், பெண் வீட்டார் இந்த உறவை எதிர்த்தனர். இதனால் அடிக்கடி இரு குடும்பத்தினருக்கும் இடையே மோதல்கள் ஏற்பட்டன.
திருமண முடிவும் எதிர்ப்பு
மாலினி, காவல் நிலைய விசாரணையிலும் வைரமுத்துவை மட்டுமே திருமணம் செய்வேன் என உறுதியளித்தார். இதனால் குடும்பம் அவரை நிராகரித்தது. சமீபத்தில் இருவரும் பதிவுத் திருமணம் செய்ய முடிவு செய்திருந்தனர். ஆனால் திங்கட்கிழமை நாள் சரியில்லை என்று காதலன் பெற்றோர் கூறியதால் , மாலினி தற்காலிகமாக வேலைக்காக சென்னை திரும்பினார்.
இதையும் படிங்க: கல்லால் அடித்து கொல்லப்பட்ட கள்ளக்காதலி.! தவிக்கும் குழந்தைகள்.! பல்லாவரத்தில் பரபரப்பு!!
வைரமுத்துவின் கொலை
இந்த நிலையில், நேற்றிரவு வைரமுத்து மெக்கானிக் கடையை மூடி வீடு திரும்பிக் கொண்டிருந்தபோது, மர்ம நபர்கள் அவரை வழிமறித்து தாக்கினர். அரிவாளால் வெட்டப்பட்ட அவர், உயிருக்கு போராடிய நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ஆனால், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
போலீஸ் விசாரணை தீவிரம்
சம்பவம் குறித்து மாவட்ட எஸ்பி ஸ்டாலின் நேரில் விசாரணை மேற்கொண்டார். அங்கு 30-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். மேலும், மாலினியின் தாயார் விஜயா முன்னதாக வைரமுத்துவிடம் மிரட்டிய வீடியோவை குடும்பத்தினர் போலீசாரிடம் சமர்ப்பித்துள்ளனர்.
இந்த ஆதாரத்தை அடிப்படையாகக் கொண்டு, காதலியின் குடும்பத்தினர் தொடர்பாக போலீசார் தீவிரமாக விசாரித்து வருகின்றனர். சமூக மற்றும் குடும்ப அழுத்தம் காரணமாக உயிரிழந்த இந்தச் சம்பவம், காதல் ஜோடிகளின் பாதுகாப்பு குறித்து பெரிய கேள்விகளை எழுப்புகிறது.
இதையும் படிங்க: காதலன் காதலி 6 மணி நேரமாக ஒரே வீட்டில் தனிமையில்! திடீரென காதலியால் இளைஞரின் அந்தரங்கம் பிளேடால் வெட்டப்பட்ட அதிர்ச்சி சம்பவம்!