தமிழகம்

தாலிகட்டும் முன்னே மனைவிக்கு செல்போன், நகை, மாமனாருக்கு பைக் பரிசு.. மிளகாய் அரைத்த பெண் வீடு..!

Summary:

தாலிகட்டும் முன்னே மனைவிக்கு செல்போன், நகை, மாமனாருக்கு பைக் பரிசு.. மிளகாய் அரைத்த பெண் வீடு..!

நிச்சயிக்கப்பட்ட பெண்ணுக்கு செயின், செல்போன், மாமனாருக்கு பைக் போன்றவை மணமகனால் கொடுக்கப்பட்ட நிலையில், பெண் கம்பி நீட்டியதால் மணமகன் சோகத்திற்கு உள்ளாகி, கொடுத்த பொருளை கேட்டு புகார் அளித்த சம்பவம் நடந்துள்ளது.

மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள தரங்கம்பாடி, கிளியனூர் பகுதியை சார்ந்தவர் தங்கையன். இவரது மகன் சின்னத்தம்பி (வயது 28). இவர் வெளிநாட்டில் பணியாற்றிவிட்டு, கடந்த வருடம் சொந்த ஊருக்கு வந்துள்ளார். மகனுக்கு திருமணம் செய்து வைக்க சின்னத்தம்பியின் பெற்றோர்கள் முடிவெடுத்துள்ளனர். 

இதனையடுத்து, மகனுக்கு வரன் தேடுகையில், மயிலாடுதுறை வில்லியநல்லூர் மேட்டுத்தெரு பகுதியை சார்ந்த முருகனின் மகள் அபிநயா (வயது 18) என்ற பெண்ணை திருமணம் செய்ய பேசி முடிக்கப்பட்டு, கடந்த 28 ஆம் தேதி நிச்சயம் நடந்துள்ளது. வரும்கால மனைவிக்கு ஆசையாக 2 பவுன் செயின், ரூ.13 ஆயிரம் மதிப்புள்ள செல்போன், மாமனாருக்கு பைக் போன்றவற்றை சின்னத்தம்பி வாங்கி கொடுத்துள்ளார். 

இந்த நிகழ்வுக்குப்பின்னர், கடந்த 15 ஆம் தேதி அபிநயாவின் பெற்றோருக்கு தொடர்பு கொள்கையில், அபிநயாவின் தந்தை அபிநயாவை காணவில்லை என்றும், அவரை தேடி வருவதாகவும் தெரிவித்துள்ளார். அபிநயாவுக்கு தொடர்பு கொண்டபோது, "நான் வரமாட்டேன். நீ மற்றொரு பெண்ணை திருமணம் செய். இது என் பெற்றோருக்கும் தெரியும்" என்று கூறி அழைப்பை துண்டித்துள்ளார். 

இத்தகவலை ஊர் முக்கியஸ்தர்களுக்கு தெரியப்படுத்திய நிலையில், நிச்சய செலவு ரூ.50 ஆயிரம், சின்னத்தம்பி வாங்கி கொடுத்த செயின், செல்போன், பைக் போன்றவற்றை மீண்டும் தருமாறு பெண்வீட்டாரிடம் கேட்கப்பட்டுள்ளது. பெண் வீட்டின் சார்பில் பொருளை கொடுப்பதாக தெரிவித்த நிலையில், இன்று வரை அதனை மீண்டும் ஒப்படைத்ததாக தெரியவில்லை. 

மேலும், பெண் வீட்டின் சார்பில் பணம் மற்றும் பொருட்களை திரும்ப தராமல் இழுத்தடித்து வந்த நிலையில், பாதிக்கப்பட்ட சின்னதனம்பி தரப்பு மணல்மேடு காவல் நிலையத்தில் இதுகுறித்து புகார் அளித்துள்ளனர். 


Advertisement