சிறுவன் மீது தாக்குதல் நடத்தியதை தட்டிக்கேட்டதால் ஆத்திரம்; 2 இளைஞர்கள் படுகொலை.!



Mayiladuthurai 2 Youth Killed 


மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள பெரம்பூர், முட்டம் கிராமத்தில் வசித்து வரும் ராஜ்குமார், தங்கதுரை, மூவேந்தன் சாராய வியாபாரிகளாக இருக்கின்றனர். உள்ளூரில் எதற்காக சாராயம் விற்கிறாய்? என மக்கள் கேட்டால் அவர்களின் மீது தாக்குதல் நடத்துவது, கொலை மிரட்டல் விடுவது என இருந்து வந்துள்ளனர். 

கடந்த சில நாட்களாக காவலர்கள் மேற்கொண்ட சாராய தேடுதல் வேட்டையில், ராஜ்குமார் கைது செய்யப்பட்டு பின் ஜாமினில் வெளியே வந்துள்ளார். ஜாமினில் வந்ததும் மீண்டும் ராஜ்குமார் தனது சாராய விற்பனை பணியை தொடங்கி இருக்கிறார். 

Mayiladuthurai

தாக்குதலை தட்டிக்கேட்டவர் கொலை

இந்த விஷயத்தை அதே பகுதியில் வசித்து வரும் 17 வயது சிறுவன் தட்டிகேட்கவே, அவரின் மீது சாராய கும்பல் தாக்குதல் நடத்தியது. இதனால் சாராய கும்பலை அப்பகுதியில் வசித்து வரும் கல்லூரி மாணவர் ஹரிசக்தி, பட்டதாரி இளைஞர் ஹரிஷ் தட்டிக்கேட்டுள்ளனர். 

இதையும் படிங்க: சென்னை: கலிகாலம்.. தனிமை பெண்கள் டார்கெட்.. 3 பேர் கும்பலால் 34 வயது பெண்ணுக்கு விடுதி அறையில் நடந்த பயங்கரம்..!

இது அங்கு இருதரப்பு வாக்குவாதத்தை உண்டாக்கவே, சாராய வியாபாரிகள் ராஜ்குமார், தங்கதுரை, மூவேந்தன் ஆகியோர் சேர்ந்து சக்தி, ஹரிஷ் ஆகியோரை தாக்கி இருக்கின்றார். கத்தியால் சரமாரி வெட்டும் விழுந்துள்ளது. இதில் இருவரும் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தனர். 

தகவல் அறிந்து வந்த காவல்துறையினர் பலியான இளைஞர்களின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும், இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி குற்றவாளிகள் மூவரை கைது செய்தனர். 

இதையும் படிங்க: எங்களை மிரட்டுறீங்களா? 40 இலட்சம் மாணவர்களின் எதிர்காலம்.. நா ததும்ப அமைச்சர் அன்பில் மகேஷ் பேச்சு.!